என்னுடைய $124 பில்லியன் சொத்து யாருக்கு..? ஜெப் பெசோஸ் எடுத்த முக்கிய முடிவு.. பில் கேட்ஸ் ஹேப்பி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா-வை தலைமையிடமாகக் கொண்டு உலகில் பெரும்பாலான நாடுகளில் இயங்கி வரும் அமேசான்.காம் நிறுவனம் வெறும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக மட்டும் அல்லாமல் டெக் நிறுவனமாகவும் விளங்குகிறது.

டிவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனத்தைப் போலவே இந்த வாரத்தின் துவக்கம் முதல் அதன் கார்ப்பரேட் மற்றும் டெக்னாலஜி பிரிவுகளில் இருக்கும் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் தனது சொத்துக்களை என்ன செய்யப்போகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

10000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான்.. மெட்டா-வுடன் போட்டியா..? அச்சத்தில் ஊழியர்கள்..! 10000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான்.. மெட்டா-வுடன் போட்டியா..? அச்சத்தில் ஊழியர்கள்..!

அமேசான்.காம்

அமேசான்.காம்

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோஸ் தன்னுடைய 124 பில்லியன் டாலர் சொத்துக்களில் பெரும்பகுதியைத் தனது வாழ்நாளில் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக உலகின் 4வது பெரிய பணக்காரர் ஆக இருக்கும் ஜெப் பெசோஸ் திங்கட்கிழமை CNN-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லாரன் சான்செஸ்

லாரன் சான்செஸ்

தனது சொத்தில் பெரும் பகுதியைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்துள்ள ஜெப் பெசோஸ் எதற்காக, யாருக்கு நன்கொடை அளிக்கப் போகிறார் என்பது குறித்த விவரங்களை வழங்கவில்லை. மேலும் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது கேர்ள்பிரென்ட் ஆன லாரன் சான்செஸ் இணைந்து தனது சொத்துக்களை வழங்குவதற்கான தளத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

பெசோஸ் எர்த் ஃபண்ட்
 

பெசோஸ் எர்த் ஃபண்ட்

உலகின் 4வது பெரிய பணக்காரராக இருக்கும் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் நிர்வாகத் தலைவராக இருக்கும் போது அவர் சொந்த முயற்சியில் உருவாக்கிய பெசோஸ் எர்த் ஃபண்ட் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், இயற்கையைப் பாதுகாப்பதற்கும் 10 பில்லியன் டாலர்கள் அளவிலான தொகையை நன்கொடையாக அளிக்க உறுதி அளித்தார்.

பெசோஸ் கரேஜ் & சிவிலிட்டி விருது

பெசோஸ் கரேஜ் & சிவிலிட்டி விருது

சனிக்கிழமை நாட்டுப்புற இசை பிரபலம், நன்கொடையாளருமான டோலி பார்டன்-க்கு 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெசோஸ் கரேஜ் & சிவிலிட்டி விருது மூலம் அளிக்கப்பட்டதன் அறிவிப்பு வெளியானது. இந்த விருது தைரியத்துடனும் நாகரீகத்துடனும் தீர்வுகளைக் காணும் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் அளிக்கப்படுகிறது.

ஜெப் பெசோஸ் சொத்துக்கள்

ஜெப் பெசோஸ் சொத்துக்கள்

இதேபோல் 2021 ஆம் ஆண்டில் அமேசானின் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகிய ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதனுடன் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் மற்றும் விண்வெளி சுற்றுலா நிறுவனமான ப்ளூ ஆரிஜின் ஆகியவற்றில் பெரிய அளவிலான பங்குகளை வைத்துள்ளார்.

பில் கேட்ஸ், வாரன் பபெட்

பில் கேட்ஸ், வாரன் பபெட்

உலகம் முழுவதும் இருக்கும் பெரும் பணக்காரர்கள் தங்களது சொத்து மதிப்பில் பெரும் பகுதியை நன்கொடையாக அளிப்பதை தற்போது பலர் பின்பற்றி வருகின்றனர். இதில் முக்கியமாகப் பில் கேட்ஸ், வாரன் பபெட் ஆகியோர் அதிகளவிலான பணத்தை நன்கொடையாக அளித்து வருகின்றனர். ஆனால் சமீபத்தில் பில் கேட்ஸ் அளிக்கப்பட்டு வரும் நன்கொடை மூலம் எலான் மஸ்க்-கிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாகத் தகவல் வெளியானது.

கூடுதல் உற்சாகம்

கூடுதல் உற்சாகம்


பில் கேட்ஸ், வாரன் பபெட் வழியில் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கும் ஜெப் பெசோஸ் பெரும் தொகையை நன்கொடையாக அளிக்கத் தயாராகியுள்ளது பில் கேட்ஸ் போன்றோர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon.com founder Jeff Bezos will give away most of $124 billion wealth along with Lauren Sanchez

Amazon.com founder Jeff Bezos will give away most of $124 billion wealth along with Lauren Sanchez
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X