80% வரை சலுகை.. அமேசான் மற்றும் பிளிப்கார்டின் விழாக்கால விற்பனை.. என்னென்ன பொருட்களுக்கு ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை காலம் என்றாலே அமேசான் மற்றும் பிளிப்கார்டின் விற்பனை திருவிழாவும் ஆரம்பித்துவிடும்.

அதிலும் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், நிச்சயம் இந்த நிறுவனங்கள் பலத்த தள்ளுபடியை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால், பிளிப்கார்டு மற்றும் அமேசானின் விற்பனை திருவிழா ஆரம்பிக்க உள்ளது.

பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே
 

பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே

பொதுவாக இந்த காலகட்டத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற சலுகை வழங்கி வருகின்றது. இதே அமேசான் தி கிரேட் இந்தியன் சேல் என்ற விற்பனையை வழங்கி வருகின்றது.

உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு எனலாம். குறிப்பாக பிளிப்கார்டின் பிளஸ் உறுப்பினர்களுக்கும், அமேசானின் பிரைம் உறுப்பினர்களுக்கும் அதிரடியான பல சலுகைகளை வழங்கி வருகின்றது.

ஹெச்டிஎஃப்சி கார்டுக்கு சலுகை

ஹெச்டிஎஃப்சி கார்டுக்கு சலுகை

இ - காமர்ஸ் நிறுவனங்களின் இந்த விழாக்கால விற்பனையில், அதிரடியான சலுகையினை வழங்கி வருகின்றன. முந்தைய சலுகைகளை போலவே, இந்த முறையும் ஹெச்டிஎஃப்சி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செய்ய பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்கும்.

எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு

எக்ஸ்சேன்ஜ் சலுகையும் உண்டு

அமேசான் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபகரணங்கள் மற்றும் பலவற்றை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது 13,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஊக்கவிக்கவும் திட்டமிட்டுள்ளது. அமேசான் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களில் பலத்த சலுகையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கு சலுகை
 

எஸ்பிஐ கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கு சலுகை

கடந்த காலத்தில் வழங்கியதை போலவே பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, பல சலுகைகளை வழங்கலாம். அதே போல எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் 10% உடனடி சலுகையை பெற முடியும். இவற்றோடு பேடிஎம்மினை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்பவர்களுக்கு சில கேஸ் பேக் சலுகைகளும் உண்டு.

பிளிப்கார்டில் 80% வரை சலுகை

பிளிப்கார்டில் 80% வரை சலுகை

பிளிப்கார்டினை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மொபைல்களை பாதுகாக்கும் உபகரணங்கள் வெறும் 1 ரூபாய்க்கு கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு பிளிப்கார்டில் டிவிக்கு 80% வரை சலுகை வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகா பிரைஸ் டிராப் சலுகை

மகா பிரைஸ் டிராப் சலுகை

டிவிக்கு மட்டும் அல்ல, மற்ற எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பலவும் சலுகை விலையில் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மகா பிரைஸ் டிராப் (Maha price drop) என்ற சலுகையின் மூலம், கூடுதலாக 20% சலுகையினை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon, flipkart festival sales will come soon, please check offers and discounts

Amazon, flipkart festival sales will come soon, flipkart offers on Smartphone’s including mobile and other electronics.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X