அமேசானின் அதிரடி சலுகை.. அதுவும் 80% ஆஃபர்.. என்னென்ன பொருட்களுக்கு.. என்று ஆரம்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவிழா என்றாலே பல சலுகையும் தள்ளுபடியும் வழங்குவதை காண முடியும். அதிலும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களில் சொல்லவே தேவையில்லை. அந்தளவுக்கு ஆஃபரும் சலுகையும் இருக்கும்.

சிலர் இந்த சலுகை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளவர்கள் ஏராளம். ஏனெனில் தாங்கள் விரும்பிய ஒரு பொருளை, குறைந்த விலையில் பல சலுகைகளுடன் பெறுவது என்பது, அப்போது தான் நனவாகும்.

அதுவும் அமேசானும் பிளிப்கார்டும் போட்டி போட்டுக் கொண்டு வாரி வழங்கும் சலுகை மழையில், வாடிக்கையாளர்கள் மகிழ்வது வருடா வருடம் நடக்கும் ஒரு விஷயமே.

பிளிப்கார்டின் Big saving day.. களைகட்ட போகும் விற்பனை திருவிழா.. வெறும் ரூ.1 புக் செய்யலாம்..!

என்னென்ன சலுகைகள்?
 

என்னென்ன சலுகைகள்?

இந்த நிலையில் பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் என்ன சலுகைகளை அளிக்கப் போகின்றன. என்னென்ன சலுகைகள் உள்ளன. என்றிலிருந்து ஆரம்பிக்கின்றன, இப்படி பல கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். சரி வாருங்கள் அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்,

அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்,

பொதுவாக ஆன்லைன் இ-காமர்ஸ் வணிகத்தில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான், தொடர்ச்சியாக அவ்வப்போது பல சலுகைகளை வாரி வழங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால் இது விழாக்கால பருவத்தில் வரும் போது பலரின் கவனத்தினையும் ஈர்க்கிறது. அமேசானின் இந்த கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல், தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அக்டோபர் 6 அன்று அறிவிக்கலாம்

அக்டோபர் 6 அன்று அறிவிக்கலாம்

எனினும் அக்டோபர் 6ம் தேதியன்று இந்த சலுகை தேதியினை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே தினத்தில் இந்த நிறுவனம் என்னென்ன சலுகைகளை வாரி வழங்க போகிறது என்பதையும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாக்கால விற்பனையில் அனைத்து துறையிலான பொருட்களும் சலுகை விலையில் விற்பனை செய்யப்படலாம் என்கிறது இந்தியன் எஸ்க்பிரஸ் செய்தி.

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு முன்பே சலுகை
 

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு முன்பே சலுகை

அதே போல வழக்கம் போல அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை முன்னதாகவே வழங்கப்படும். இதனால் அமேசானின் சலுகைகளையும், தள்ளுபடிகளையும், ஆஃபர்களையும் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பெற முடியும். அமேசானில் இந்த விழாக்கால சலுகையில் ஹெச்டிஎஃப்சி டெபிட் & கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு 10% சலுகையினை பெற முடியும்.

பஜாஜ் பைனான்ஸ் கார்டுக்கு சலுகை

பஜாஜ் பைனான்ஸ் கார்டுக்கு சலுகை

இதே போல் பஜாஜ் பைனான்ஸ் கார்டு மூலம் பொருட்களை வாங்குபவர்கள் 5% கேஸ்பேக் சலுகையும் உண்டு. இதோடு கிச்சனுக்கு தேவையான பொருட்களுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி உண்டு. இதே வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடிகள் உண்டு. இதே கிளாத்திங், ஆபரணங்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியும் உண்டு.

மின்னணு பொருட்களுக்கு 70% தள்ளுபடி

மின்னணு பொருட்களுக்கு 70% தள்ளுபடி

உணவு மற்றும் மின்னணு பொருட்கள், மின்னணு உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு 70% வரை தள்ளுபடியும் உண்டு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டிவி மற்றும் மற்ற எலக்ட் ரானிக் சாதனங்களுக்கு 65% தள்ளுபடியும், புத்தகங்கள், பொம்மைகள், பொம்மை சம்பந்தமான பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடியும் வழங்கப்படும்.

ஆபரணங்கள் & உடைகளுக்கு 80% வரை சலுகை

ஆபரணங்கள் & உடைகளுக்கு 80% வரை சலுகை

அதோ எக்கோ ஸ்பீக்கர்களுக்கும் பெரிய ஆஃபர்கள் உள்ளதாகவும், இதற்கு அதிகபட்சமாக 50% வரையில் தள்ளுபடி இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. அமேசானில் கிளாத்திங் மற்றும் ஆபரணங்களுக்கு 80% தள்ளுபடியும், நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்சனும் உண்டு. அதோடு ஸ்மார்ட்போன் களுக்கும் இந்த அதிரடியான சலுகை உண்டு. அதோடு டோட்டல் டேமெஜ் புரக்டக்சனும் உண்டு.

ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த விழாக்கால சலுகையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போனை அக்டோபர் 14 அன்று அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதுனால் அக்டோபர் 15 லிருந்து இந்த விழாக்கால சலுகையும் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே

பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே

இதே போல மற்றொரு இகாமர்ஸ் ஜாம்பவான் ஆன பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், மின் சாதனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவைகளை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon great Indian festival sales soon

Amazon great Indian festival sales starts will soon, amazon may provide upto 80% discounts for some products.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X