அம்மாவுக்கு மூச்சு திணறுது.. ஊழியர் கண்ணீர்.. இரவு நேரத்தில் ஓடிவந்து உதவிய அமேசான்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் தினமும் லட்ச கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் போதிய அக்சிஜன் இல்லாமலும், சிகிச்சை பெறப் படுக்கை இல்லாத காரணத்தால் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

2வது அலை முன்கூடிய கணித்து, போதிய ஏற்பாடுகளைச் செய்திருந்தால் இத்தகைய பாதிப்பு இருக்காது என்றும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வேக்சினை மக்களுக்கு அளித்திருந்தால் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைத்திருக்க முடியும் எனப் பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

இந்தியாவில் ஏற்பட்டு உள்ள இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டு வர மக்களும் நிறுவனங்களும் பெரிய அளவில் உதவி செய்து வரும் நிலையில், சமுக வலைத்தளத்தில் அமேசான் நிறுவனம் செய்த உதவியை நெகிழ்ந்து இந்நிறுவன ஊழியர் சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

 அம்மாவின் ஆக்சிஜன் அளவு

அம்மாவின் ஆக்சிஜன் அளவு

என் அம்மாவுக்குக் கோவிட் பாசிட்டிவ், நேற்று இரவு திடீரென SPo2 அளவு, அதாவது ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வந்தது. உடனே போனை எடுத்து அமேசான் கோவிட் சப்போர்ட் எண்ணிற்குத் தொடர்பு கொண்டேன், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள் என அமேசான் நிறுவனத்தின் ஊழியரான ஆயுஷ் சர்மா தனது லிங்கிடுஇன் பதிவில் தெரிவித்தார்.

 அமேசான் கோவிட் சப்போர்ட்

அமேசான் கோவிட் சப்போர்ட்

இரவு 1 மணிக்கு அமேசான் கோவிட் சப்போர்ட் தளத்தில் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் வேண்டும் என ரெக்வஸ்ட் வைத்தேன் காலை 4 மணிக்கு வீட்டின் மூலம் அமேசான் டிரைவர் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர் வந்தார்.

 சாதாரண விஷயமல்ல
 

சாதாரண விஷயமல்ல

இதை வெறும் போனஸ், நிறுவனத்தில் பணியாற்றுவதால் கிடைக்கும் நன்மை என எடுத்துக்கொள்ள முடியாத, ஊழியர்களின் மோசமான காலகட்டத்தில் நிறுவனம் முன்வந்து உதவுவது சாதாரண விஷயமல்ல, அதிலும் இத்தகைய இக்கட்டான சூழ்நிலை அமேசான் செய்துள்ளது வியக்கத்தக்க ஒன்று.

 அமேசான் ஊழியர்களுக்கான நிறுவனம்

அமேசான் ஊழியர்களுக்கான நிறுவனம்

இதன் மூலம் அமேசான் கஸ்டமருக்கான நிறுவனம் மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்கான நிறுவனமாக விளங்குகிறது. மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊழியர்களுக்கு உதவிய அமேசானுக்குப் பெரிய நன்றி என ஆயுஷ் குமார் தெரிவித்துள்ளார்.

 ஆயுஷ் குமார் பதிவுக்கு ஆதரவு

ஆயுஷ் குமார் பதிவுக்கு ஆதரவு

அமேசான் ஊழியரான ஆயுஷ் குமார் பதிவுக்கு இதுவரை சுமார் 98,450 லைக்குகள், 1,064 கமெண்ட் குவித்துள்ளது. இந்தப் பதிவிற்குப் பல எதிர்மறையான கருத்துக்களைப் பதிவு செய்திருந்தாலும், அதிகமானோர் அமேசானின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon India helps employee's mother at 1 AM with an oxygen concentrator

Amazon India helps employee's mother at 1 AM with an oxygen concentrator
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X