10,000 பேர் பணி நீக்கம்.. இது வருடாந்திர ரிவ்யூ திட்டம் தான்.. கூலாக பதில் சொன்ன அமேசான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய வாரங்களாகவே பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றன. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பட்டியலில் அமேசான் நிறுவனமும் இணைந்துள்ளது.

அமேசான் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே இது குறித்தான தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக பணி நீக்கமும் செய்துள்ளது. பணி நீக்கம் தொடர்பாக ஊழியர்களுக்கு மெயிலையும் அனுப்பியுள்ளது.

அமேசான் சாட்டையை இந்தியா பக்கம் திருப்புகிறது.. அச்சத்தின் உச்சத்தில் ஊழியர்கள்..! அமேசான் சாட்டையை இந்தியா பக்கம் திருப்புகிறது.. அச்சத்தின் உச்சத்தில் ஊழியர்கள்..!

இது வெறும் ரிவ்யூ திட்டம் தான்

இது வெறும் ரிவ்யூ திட்டம் தான்

இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நிறுவனமோ இது வருடாந்திர செயல்பாட்டு கூட்டத்தின் ரிவ்யூ திட்டம் தான் என தெரிவித்துள்ளது.

அமேசானின் இந்த பணி நீக்க நடவடிக்கையில் இந்தியவில் 200 - 300 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் தங்களது வேலைக்கு பொருத்தமானவர்கள் இல்லையோ அவர்கள் மட்டுமே வெளியேற கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.

 

பணியிடங்கள் வேண்டாம்

பணியிடங்கள் வேண்டாம்

அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டு, அந்த பணியில் இருப்பவர்களை நீக்க முடிவு செய்துள்ளது. அவர்கள் காலியாக இருக்கும் வேறு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்த நிலையால் சரிவு

மந்த நிலையால் சரிவு

அமேசான் நிறுவனத்தினை பொறுத்தவரையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான பணியாளர்கள் பயடைந்து வருகின்றனர். தற்போது உலகளாவிய அளவில் மந்த நிலை நிலவி வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு தான் நாங்கள் சில மாற்றங்களை செய்துள்ளோம். சில குழுக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு ஆதரவு

ஊழியர்களுக்கு ஆதரவு

பணி நீக்கத்தினால் பாதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் நாங்கள் ஆதரவளிக்க பணியாற்றி வருகின்றோம். உலகளாவிய மேக்ரோ சூழலை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அமேசான் ஒரு மிகப்பெரிய பரந்த நிறுவனம். ஆக உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பட்டு தான் ஆக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon mass layoff: layoffs are part of annual operating planning review process

Amazon mass layoffs: Amazon has laid off 10,000 employees. amazon says to be a review plan of the annual operating plan
Story first published: Friday, November 18, 2022, 0:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X