அமேசானில் மீண்டும் பணி நீக்கமா.. அதுவும் 20,000 பேரா.. மெட்டா ட்விட்டரைடே விஞ்சிடுமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் நிறுவனம் முன்னதாக 10,000 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. சமீபத்திய காலங்களில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், டெக் நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன.

 

இது மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் மெகா பணி நீக்கத்திற்கு பிறகு, ஜெப் பெசோஸ் தலைமையிலான அமேசான் நிறுவனமும் பணி நீக்கம் செய்தது.

டெக் ஜாம்பவான்களின் இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில், இது பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியது.

ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு.. இனி என்னவாகலாம்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு.. இனி என்னவாகலாம்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

பிங்க் கடிதம்

பிங்க் கடிதம்

எனினும் வரும் மாதங்களில் சுமார் 20,000 ஊழியர்களுக்கு பிங்க் கலர் ஸ்லீப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஸ்ட்ரிபியூசன் ஊழியர்கள் மற்றும் டெக்னாலஜி ஊழியர்கள், முக்கிய உயர் அதிகாரிகள் என பலரும் இதில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய பணி நீக்கம்

மிகப்பெரிய பணி நீக்கம்

ஊழியர்கள் (1 லெவல் முதல் 7வது லெவல் வரை) இந்த பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை போல மிகப்பெரிய பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6% பணி நீக்கமா?
 

6% பணி நீக்கமா?

கடந்த சில நாட்களாக நிறுவன உயர் அதிகாரிகள் மத்தியில், ஊழியர்களிடையே பணி செயல்திறன் குறித்து, அடையாளம் காணுமாறு கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமேசான் 20,000 ஊழியர்களை குறைத்தால், அதன் கார்ப்பரேட் ஊழியர்களில் சுமார் 6% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசானில் தற்போது உலகம் முழுக்க சுமார் 1.5 மில்லியன் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பணி நீக்க ஊதியம்

பணி நீக்க ஊதியம்

இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஊழியர்களுக்கு 24 மணி நேர அறிவிப்பு மற்றும் பணி நீக்க ஊதியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ப்ணி நீக்கம் என்பது குறிப்பிட்ட துறைகளில் இல்லை. அது அனைத்து துறைகளிலும் இருக்கலாம் என ஒரு தரப்பு தெரிவித்துள்ளது. .

செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை

இந்த மிகப்பெரிய பணி நீக்கமாக கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்த மிகப்பெரிய பணி நீக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செலவு குறைப்பு என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்

விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்

கடந்த மாதமே பணி நீக்க நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அமேசான் நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்த எண்ணிக்கையானது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VRS திட்டம்

VRS திட்டம்

மேலும் ஏற்கனவே அமேசான் நிறுவனம் நிறுவனத்தில் இருந்து தாங்களாகவே வெளியேறும் ஊழியர்களுக்கான VRS திட்டத்தினையும் அறிவித்தது. இதன் மூலம் மேற்கொண்டு ஊழியர்களை மேற்கொண்டு வெளியேற அனுமதிக்கும் என தெரிவித்துள்ளது.

எங்கள் வருடாந்திர திட்டமிடல் செயல்முறை புதிய ஆண்டிலும் நீட்டிக்கப்படுகிறது. அதாவது தலைவர்கள் தொடர்ந்து மாற்றங்களை செய்வதால் அதிக பங்கு குறைப்புகள் இருக்கும் எனலாம்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள்

பாதிக்கப்பட்ட ஊழியர்கள்

அந்த முடிவுகள் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் பகிரப்படும். ஒவ்வொரு தலைவரும் அந்தந்த அணிகளுக்குத் தகவல் தெரிவிக்கும்போது நாங்கள் விவரங்களை கூறுவோம் என அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

amazon may plans to sack 20,000 employees including managers

Amazon is expected to give about 20,000 employees pink sleep in the coming months
Story first published: Monday, December 5, 2022, 22:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X