இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான், இந்திய வர்த்தகச் சந்சையைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகப் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் அதேவேளையில் வேகமாக வளர்ந்து வரும் ஜியோமார்ட் மற்றும் சக போட்டி நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க அதிகளவிலான முதலீட்டில் வர்த்தகம் விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தனது பேமெண்ட் சேவை நிறுவனமான அமேசான் பே நிறுவனத்தின் நஷ்ட அளவு சுமார் 61 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாருதி சுசூகி-ன் புதிய ஆன்லைன் பைனான்சிங் சேவை.. இனி கார் வாங்குவது ரொம்ப ஈஸி!

அமேசான் பே
மார்ச் 31, 2020 உடன் முடிந்த நிதியாண்டில் அமேசான் நிறுவனத்தின் பேமெண்ட் சேவை நிறுவனமான அமேசான் பே வர்த்தகப் பிரிவின் நஷ்ட அளவீடுகள் சுமார் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் அமேசான் பே நிறுவனம் சுமார் 1,160 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில், 2019-2020ஆம் நிதியாண்டில் நஷ்ட அளவு 1,868 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் அமேசான் பே நிறுவனத்தின் வருவாய் 64 சதவீதம் அதிகரித்து 1,370 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நஷ்டத்திற்கான காரணம்
அமேசான் இந்தியா தளத்தில் ஷாப்பிங் செய்யப்படும் போது அமேசான் பே ஆஃபர்களையும், சந்தையில் பிற யூபிஐ செயலிகளுடன் போட்டிப்போட்டு அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெறுவதற்காக அதிகளவிலான விளம்பரம் செய்யப்பட்டத்தில் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதேபோல் பல மூன்றாம் தர பேமெண்ட் தளத்தில் சேவை அளிக்கப்பட்ட காரணத்திற்காகவும் அமேசான் பே அதிகளவில் செலவு செய்துள்ளது.

விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன்
அமேசான் பே கடந்த நிதியாண்டில் மட்டும் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷனல் சேவைக்காகச் சுமார் 2,212 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது ஒருவருடத்திற்கும் முன்பு இதன் அளவு 1,423 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு வருடத்தில் இந்நிறுவனத்தின் செலவு செய்யப்பட்ட அளவீடு 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பேடிஎம்
அமேசான் பே நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான பேடிஎம் 2019-20ஆம் நிதியாண்டில் தனது நஷ்ட அளவீட்டை 30 சதவீதம் வரையில் குறைத்துள்ளது. இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் மொத்த நஷ்ட அளவு 2,942 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு வெறும் 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

பேடிஎம், போன்பே மற்றும் அமேசான் பே
மார்ச் 2019 உடன் முடிந்த நிதியாண்டில் இந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனங்களான பேடிஎம், போன்பே மற்றும் அமேசான் பே ஆகிய 3 நிறுவனங்களின் மொத்த நஷ்ட அளவீடு 7,283 கோடி ரூபாய், மேலும் இந்த நஷ்ட அளவீடு 167 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.