எல்லாரும் ரெடியா? சூப்பர் தள்ளுபடியில் அமேசான் ப்ரைம் டே சேல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பண்டிகை காலம் செப்டம்பரில் இருந்து தொடங்குகிறது என ஒரு உத்தெசமாகச் சொல்லலாம்.

 

மெல்ல விநாயகர் சதுர்த்தி, ரக்‌ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், நவராத்திரி என எல்லா பண்டிகைகளும் வரிசையாக வரும்.

இந்த பண்டிகை மற்றும் திருவிழாக்களை முன்னிட்டு, அமேசான் கம்பெனி தன் ப்ரைம் டே விற்பனையை அடுத்த மாதத்தில் தொடங்க இருக்கிறார்களாம். இதனால் வாடிக்கையாளர்கள் செலவழிப்பது அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

சிறப்புத் தள்ளுபடி

சிறப்புத் தள்ளுபடி

நீங்கள் ஹெச் டி எஃப் சி வங்கியின் டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்ட் வைத்திருக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு மட்டும், இந்த இரண்டு நாள் அமேசான் ப்ரைம் டே விற்பனையில் 10 % சிறப்பு உடனடி தள்ளுபடி (Instant Discount) வேறு கிடைக்குமாம். கார்ட் இல்லை என்றால், கார்ட் வைத்திருக்கும் நண்பரை இன்றே கரெட் செய்யுங்கள் ப்ரோ.

முக்கியத்துவம் ஏன்

முக்கியத்துவம் ஏன்

இந்த வருடம் அமேசானின் ப்ரைம் டே விற்பனை ஒரு முக்கிய கவனம் பெறுகிறது. காரணம், கடந்த சில மாதங்களாக விட்ட விற்பனைகளை எல்லாம் இந்த ப்ரைம் டே விற்பனை வழியாக பிடிக்க ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கிறது அமேசான் கம்பெனி. அதே போல வியாபாரிகளுக்கும், தங்கள் கையில் தேக்கி வைத்திருக்கும் சரக்குகளை கழிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

முதல் முறை
 

முதல் முறை

இதுவரை அமேசான் ப்ரைம் டே விற்பனைத் திருவிழா, உலகம் முழுக்க பெரும்பாலும் ஒரே நாளில் நடக்குமாம். ஆனால் இந்த ஆண்டு தான் முதல் முறையாக கொரோனா வைரஸ் மற்றும் அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட லாக் டவுன் போன்ற பிரச்சனையால், அமேசான் ப்ரைம் டே விற்பனையை பல்வேறு நாடுகளில் தனித் தனியாக நடத்துகிறார்களாம்.

300 புதிய பொருட்கள்

300 புதிய பொருட்கள்

சாம்சங், இண்டெல், ஃபேப் இந்தியா, டாபர், கோத்ரேஜ், மேக்ஸ் ஃபேஷன், ஜே பி எல், வேர்ல் பூல், டெகத் லான், ஹீரோ சைக்கிள், ஒன் ப்ளஸ், சாம்சங், சியாமி என பல பிராண்டுகள் சுமாராக 300-க்கும் மேற்பட்ட புதிய பொருட்களை லாஞ்ச் செய்ய இருக்கிறார்களாம்.

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

நாம் ஏற்கனவே சொன்னது போல இந்தியாவில் இது பண்டிகை மற்றும் திருவிழாக்கள் தொடங்கும் காலம். பொதுவாகவே இந்தியப் பொருளாதாரத்தில் இந்த கால கட்டங்களில் நுகர்வு அதிகரிக்கும். "இந்த கால கட்டத்தில் நுகர்வோர்களும் வியாபாரிகளும் பொருட்களை வாங்கவும் விற்கவும் விரும்புகிறார்கள். அதற்குத் தகுந்தாற் போலத் தான் தற்போது அமேசான் ப்ரைட் டே விற்பனையைக் கொண்டு வந்து இருக்கிறோம்" என்கிறார் அமேசான் ப்ரைம் இந்தியா தலைவர் அக்‌ஷய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon Prime Day sale on 6 Aug 2020 with great deals & discounts

The amazon e commerce company is going to begin its Amazon Prime Day sale on 6th of Aug 2020 with great deals & discounts to attract consumers and customers. Amazon expects to recover the lost sale in the lock down period.
Story first published: Tuesday, July 21, 2020, 15:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X