பெங்களுரு: இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உணவு டெலிவரி சந்தையிலும் விரைவில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து முன்னரே பல அறிக்கைகள் வெளியானாலும், 2020 ஜனவரியில் உபெர் ஈட்ஸ் உணவு டெலிவரி வர்த்தகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், உள்ளூர் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவுக்கு எதிராக விரைவில் அமேசான் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் TechCrunch கருத்துப் படி, அமேசானின் பிரைம் நவ் அல்லது அமேசான் ஃப்ரெஷ் இயங்குதளத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த சேவையின் அறிமுகம் வரும் மாதங்களில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமேசான் இந்த சேவையில் பல காலாண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், இதை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் சில காலமாக பெங்களூரிலும் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் அமேசான் உணவு டெலிவரி பல உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு எதிராக அமேசான் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. உணவுப் பொருட்களைப் பொறுத்த வரை நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அமேசான் ப்ரஸ் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியது, இது ஸ்டார்டப்களான க்ரோஃபர்ஸ் மற்றும் பிக் பாஸ்கெட்டுடன் நேரடி போட்டியில் உள்ளது. அமேசான் வழங்கும் சேவை அதன் பிரைம் நவ் சேவையால் இயக்கப்படுகிறது.
வெட்டு கிளிகளை எதிர்த்து போராட இவ்வளவு செலவாகுமா.. பாகிஸ்தான் என்னவாகுமோ!
அதிலும் மற்ற டெலிவரி நிறுவனங்கள் வழங்கும் சலுகையால் கடுப்பில் உள்ள பல உணவகங்கள் தற்போதுள்ள செயலிகளில் ஆர்வமின்மையால், அமேசானுக்கு இது சரியான மற்றும் சாதகமானதாக இருக்கும்.
அமேசான் இந்தியா ஏற்கனவே தனது பலத்த சலுகையினால், பல இந்தியர்களை தனது சலுகையாலும் தள்ளுபடியாலும் அடிமைப்படுத்தியுள்ள நிலையில், தற்போது உணவு டெலிவரி வர்த்தகத்திலும் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே
தனது ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தால், பல வர்த்தகர்களின் வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள உணவு டெலிவரி வர்த்தகத்திலும் பல தள்ளுபடிகளை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சோமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வரும் இந்த நிலையில், அமேசானுக்கு இது நல்ல வாய்ப்பாகவே அமையும் என்றும் கூறப்படுகிறது.