பியூச்சர் ரீடைல்-ஐ கைப்பற்ற மீண்டும் போட்டி.. அம்பானி, அதானி களத்தில் இறங்கினர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருந்த ரிலையன்ஸ் ரீடைல் அதீத கடனால் மிகவும் மோசமாக நிலைக்குத் தள்ளப்பட்டது.

முதலில் நிறுவனத்தைக் காப்பாற்ற அமேசானிடம் முக்கியமான கட்டுப்பாடுகள் நிறைந்த ஒப்பந்தம் மூலம் கடன் பெற்றது.

இந்த நிலையில் வர்த்தகத்தை மேம்படுத்த முடியாத பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி தனது ரீடைல் வர்த்தகத்தை மொத்தமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தது.

வழக்கு

வழக்கு

இதைத் தொடர்ந்து நடந்த வழக்கின் மத்தியில் அதிகப்படியான கடைகளை ரிலையன்ஸ் கைப்பற்றியது. தற்போது வெகு சில கடைகள் மட்டுமே கொண்டு இயங்கி வரும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தைக் கைப்பற்ற அம்பானி, அதானி உட்பட 15 பேர் போட்டிப் போட்டு வருகின்றனர்.

 ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் தலையீடு காரணமாகப் பியூச்சர் ரீடைல் மற்றும் அமேசான் மத்தியிலான வழக்கு இறுதி முடிவுக்கு வராத நிலையில் பியூச்ச்சர் குரூப் தனது கடன் தவணைகளைச் செலுத்த முடியாமல் நிற்கிறது.

15 நிறுவனங்கள் விருப்பம்

15 நிறுவனங்கள் விருப்பம்


இந்த நிலையில் பியூச்சர் ரீடைல்-ஐ திவால் அறிவித்துத் தீர்வு காண வேண்டும் என இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் முடிவு செய்த நிலையில் விருப்ப விண்ணப்பத்தைப் பெற துவங்கிய காரணத்தால் 15 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளது.

பியூச்சர் குரூப் - அமேசான்

பியூச்சர் குரூப் - அமேசான்

இதற்கிடையில் பியூச்சர் குரூப் - அமேசான் மத்தியிலான வழக்கு நடத்திக்கொண்டு இருக்கும் போது, பியூச்சர் ரீடைல்-ன் மொத்த வர்த்தகத்தையும் ரிலையன்ஸ் ரீடைல் கையில் எடுத்துக்கொண்டு பொருட்களை வாங்குவது முதல் நிர்வாகம் வரையில் தனது நிர்வாகத்தின் கீழ் நடந்தி வந்தது.

 5300 கோடி ரூபாய் நிலுவை

5300 கோடி ரூபாய் நிலுவை

இந்தப் பணிகளுக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 5300 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்திருந்த நிலையில், தற்போது பியூச்சர் ரீடைல் விற்பனை செய்யும் resolution professional (RP) குழுவிற்கு ரிலையன்ஸ் தனது 5300 கோடி ரூபாய் நிலுவை குறித்து விளக்கம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

302 கடைகள்

302 கடைகள்

பியூச்சர் ரீடைல் இந்தியா முழுவதும் சுமார் 950க்கும் அதிகமான கடைகளை நடத்தி வந்த நிலையில் தற்போது 302 கடைகள் உடன் இயங்கி வருகிறது, இதில் 30 பெரிய கடைகள் 272 சிறிய கடைகளாகும். பியூச்சர் ரீடைல் நிறுவனம் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனத்திடம் இருந்து 21,450 கோடி ரூபாயும், ஆப்ரேஷனல் கிரெடிட்டார்ஸ் உடன் 3,064 கோடி ரூபாயும், பிற அமைப்பினரிடம் இருந்து 272 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளது.

15 நிறுவனங்கள்

15 நிறுவனங்கள்

இந்த 302 கடைகளையும் பியூச்சர் ரீடைல் கட்டமைப்புகளையும் கைப்பற்ற அதானி ஏர்போர்ட் ஹோல்ட்டிங் மற்றும் Flemingo Group மத்தியிலான கூட்டணி நிறுவனமான April Moon Retail, அதைத் தொடர்ந்து டிஎஸ் குரூப், டிக்கி ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், எஸ்என்விகே ஹாஸ்பிடாலிட்டி, கேப்ரி குளோபல், பி ரைட் ரியல் எஸ்டேட்-அய்கார்ட் ஃபின்டெக் கூட்டமைப்பு, டபிள்யூஎச்எஸ்மித் டிராவல், யுனைடெட் பயோடெக், பொம்மிடாலா எண்டர்பிரைசஸ், நல்வா ஸ்டீல் அண்ட் பவர், கார்டன் மற்றும் பேயார்ட், யுவி மால்டிபிள் அசெட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், ஷாலிமார் கார்ப்பரேஷன் மற்றும் பூமிரெட்டி கரி மோகன் ரெட்டி தலைமையிலான கூட்டமைப்பு ஆகியவை தற்போது போட்டிப்போட்டு வருகிறது.

டிசம்பர் 15 இறுதி முடிவு

டிசம்பர் 15 இறுதி முடிவு

தற்போது விண்ணப்பம் முன்வைக்கப்பட நவம்பர் 20 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு முடிவு எடுக்கப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ambani, Adani entering race to acquire Future Retail; 302 stores left with kishore biyani

Ambani, Adani entering race to acquire Future Retail; 302 stores left with kishore biyani
Story first published: Friday, November 11, 2022, 10:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X