அமெரிக்காவை பந்தாடப்போகும் ரெசிஷன்.. ஜோ பைடன் பிளான் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச பொருளாதாரம் ரெசிஷனுக்குச் செல்ல உள்ளது எனப் பல முன்னணி நிதி நிறுவனங்கள் ஏற்கனவே கணித்துள்ள நிலையில், சமீபத்தில் ஐநா உலக நாடுகளுக்குப் பொருளாதார மந்த நிலை குறித்துக் கடுமையாக எச்சரித்தது.

இது மட்டும் அல்லாமல் இந்த ரெசிஷன் 2008ல் ஏற்பட்ட சர்வதேச நிதியியல் நெருக்கடியை விடவும், 2020 கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட ரெசிஷனை விடவும் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச பொருளாதாரம் ரெசிஷனுக்குச் செல்கிறது என்பதை உணர்த்தும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா..?

சீன நிறுவனங்கள் அதிர்ச்சி.. வெறும் 10000 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போன் அசத்தும் இந்திய நிறுவனம்..! சீன நிறுவனங்கள் அதிர்ச்சி.. வெறும் 10000 ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போன் அசத்தும் இந்திய நிறுவனம்..!

பணவீக்கம்

பணவீக்கம்

உலக நாடுகளில் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. உலகளவில் நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதை நிறுத்தியுள்ளது. இதேபோல் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் தயாராகியுள்ளது.

வல்லரசு நாடுகள்

வல்லரசு நாடுகள்

வல்லரசு நாடுகளில் தொடர்ந்து நாணய கொள்கை, பட்ஜெட் ஒதுக்கீட்டில் பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சர்வதேச பொருளாதாரம் ரெசிஷன் அல்லது stagnation நிலைக்குச் செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்

கடந்த சில மாதத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 வருட உச்சத்தில் உள்ளது, இதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என அனைத்து தரப்பினரும் கணித்துள்ளனர்.

டாலரின் மதிப்பு உயர்வதில் அமெரிக்காவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் பெரிய அளவில் நன்மை இருந்தாலும் உலகளவில் கடுமையாகப் பாதிப்பு ஏற்படும் இது மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்கப் பொருளாதாரம்

அமெரிக்கப் பொருளாதாரம்

அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அளவுகோலாக இருப்பது ஷாப்பிங் தான், ஆனால் சமீபத்தில் அமெரிக்க மக்கள் செலவு செய்யும் அளவீட்டில் மிகப்பெரிய அளவு குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அறிவித்த வட்டி விகித உயர்வு தான்.

அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள்

அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள்

உலகளவில் பொருட்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து குறைந்து வருவதால் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தகம் லாபம் குறையத் துவங்கியது. இதற்கிடையில் வட்டி விகித உயர்வால் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பல பில்லியன் டாலர் கடன்களுக்கு அதிகப்படியான தொகையைத் தற்போது வட்டியாகச் செலுத்த வேண்டும்.

அமெரிக்கப் பங்குச்சந்தை

அமெரிக்கப் பங்குச்சந்தை

ரஷ்யா - உக்ரைன் போர், பெடரல் ரிசர்வ்-வின் வட்டி விகித உயர்வு ஆகியவற்றின் மூலம் நிறுவனங்களின் லாபம், வர்த்தகம் குறையும் காரணத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சியில் உள்ளது. மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் தவித்து வருகிறது.

பல தனியார் பங்கு முதலீட்டாளர்கள் இதுவரை பார்த்திடாத வகையிலான இழப்பை 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் எதிர்கொண்டு உள்ளது.

போர்

போர்

ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் சீனா - தைவான் பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த வர்த்தகச் சந்தையும் பாதிப்படைந்துள்ளது. இதில் முக்கியமாக உக்ரைனுக்கும், தைவான் நாட்டிற்கும் அமெரிக்கா ஆதரவாக நிற்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது.

ரெசிஷன் எப்போது..?

ரெசிஷன் எப்போது..?

தற்போதைய கணிப்பின் படி ஐரோப்பாவில் சில முக்கிய நாடுகளும், பிரிட்டனும் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் ரெசிஷனுக்குச் சென்றுவிடும். இதேபோல் அமெரிக்கா 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரெசிஷனுக்குச் செல்ல உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America is heading for recession amid global economic slowdown after Russia - Ukraine war

America is heading for recession amid global economic slowdown after Russia - Ukraine war
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X