அமெரிக்க எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்ற இரண்டு இந்தியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மூத்த துணைத் தலைவராகவும், வாடிக்கையாளர் சந்தைப்படுத்தல் துறையின் சர்வதேசத் தலைவராகவும் மனோஜ் அட்லாகாவை நியமிப்பதாக அறிவித்தது.

 
அமெரிக்க எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்ற இரண்டு இந்தியர்கள்!

மேலும் தற்போது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்திய தலைமை இயக்க அதிகாரியாக உள்ள சஞ்சய் கண்ணாவைத் தற்காலிக தலைமை செயல் அதிகாரியாகவும் அறிவித்துள்ளது.

அமெரிக்க எக்ஸ்பிரஸ் வெளியிட்ட பத்திரிக்கையாளர் குறிப்பில், வாடிக்கையாளர் ஈடுபாடு உத்தியை மேம்படுத்துவதற்கும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸின் முக்கிய சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களின் வாலெட் பயன்பாட்டை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருவாய் வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் பொறுப்பாக மனோஜ் அட்லாகா இருப்பார் என தெரிவித்துள்ளது.

எந்தெந்த வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு.. யாருக்கெல்லாம் இஎம்ஐ அதிகரிக்கும்!

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ரிஸ்க் ஆப்ரேஷன்ஸ், திட்டமிடல், நிதி, வாடிக்கையாளர்கள் அட்டை தலைவர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் மனோஜ் அட்லாகா சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் கடந்த 26 வருடங்களாக பல்வேறு முக்கிய பணிகளில் ஈடுபட்டு வந்த சஞ்சய் கண்ணா, தற்காலிக தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்துகொண்டு இந்திய வணிகத்தை முழுமையாகக் கவனித்துக்கொள்வார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். ஆனால், உள்ளூரில், சிறு நகரங்களில் இந்த கார்டைப் பயன்படுத்த முடிவதில்லை. எல்லா கார்டும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. ஆகையால் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து வங்கிகள், ஏற்ற கிரெடிட் கார்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் பெரிய வித்தியாசம் என்றால் எதுவுமில்லை. எனினும் உலகம் முழுவதும் பெரும்பாலும் மாஸ்டர் கார்டு எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் வித்தியாசம் என்னவென்றால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் கொஞ்சம் மேலும், கீழும் இருக்கும், அவ்வளவுதான்.

கொரோனா பரவலில் இருந்து உலக நாடுகள் மீண்டு பயணம் செய்வதும் செலவு செய்வதும் அதிகரித்துள்ள நிலையில், 2020-ம் ஆண்டு முதல் சரிந்து வந்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவன லாபம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுபோக்கு மற்றும் சுற்றுலா துறையில் மட்டும் செலவு செய்வது 121 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. அமெரிக்க எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டுகளை அமெக்ஸ் கார்டு என கூறுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

American Express appoints Manoj Adlakha as SVP; Sanjay Khanna as interim CEO

American Express appoints Manoj Adlakha as SVP; Sanjay Khanna as interim CEO | அமெரிக்க எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்ற இரண்டு இந்தியர்கள்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X