ஆனந்த் ஈஸ்வரன்.. அமெரிக்க நிறுவனத்தின் அடுத்த இந்திய சீஇஓ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க மற்றும் உலக நாடுகளில் இருக்கும் பெரும் நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியர்களைத் தலைமை பொறுப்பில் உட்கார வைத்து அழகு பார்த்து வரும் நிலையில், சமீபத்தில் பிரான்ஸ் ஆடம்பர பேஷன் பிராண்டான Chanel நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்தியரான லீனா நாயர்-ஐ நியமித்தது, சமுக வலைத்தளத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் லீனா நாயர் நியமனத்தின் தாக்கம் முழுமையாக அடங்கும் முன்னரே அடுத்தொரு அமெரிக்க டெக் நிறுவனத்தில் தலைமை நிர்வாகப் பொறுப்பில் மீண்டும் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 MLM திட்டம் மூலம் ரூ.1500 கோடி மோசடி.. 10 லட்சம் பேர் ஏமாந்த சோகம்.. என்ன நடந்தது தெரியுமா..? MLM திட்டம் மூலம் ரூ.1500 கோடி மோசடி.. 10 லட்சம் பேர் ஏமாந்த சோகம்.. என்ன நடந்தது தெரியுமா..?

 வீயம் சாப்ட்வேர்

வீயம் சாப்ட்வேர்

வீயம் சாப்ட்வேர்.. அமெரிக்காவின் முன்னணி பேக்அப், ரெக்கவரி மற்றும் டேட்டா மேனேஜ்மென்ட் சேவை நிறுவனமாக விளங்குகிறது, இந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியரான ஆனந்த் ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். பெரிய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்தியர்களைச் சிஇஓ-வாக நியமிக்கத் துவங்கியுள்ளது.

 ஆனந்த் ஈஸ்வரன்

ஆனந்த் ஈஸ்வரன்

ஆனந்த் ஈஸ்வரன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நீண்ட காலமாக வசித்து வருவது மட்டும் அல்லாமல் பல அமெரிக்க நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் பணியாற்றியுள்ளார். வீயம் சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த வில்லியம் ஹெச் லார்ஜென்ட் பதவி விலகிய நிலையில் ஆனந்த் ஈஸ்வரன் தற்போது சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். இது மட்டும் அல்லாமல் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் சேர்ந்துள்ளார்.

 மைக்ரோசாப்ட், SAP, HP,

மைக்ரோசாப்ட், SAP, HP,

ஆனந்த் ஈஸ்வரன் இதற்கு முன்பு ரிங் சென்டரல் நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தார். மேலும் ஆன்ந்த் ஈஸ்வர் மைக்ரோசாப்ட், SAP, HP, ஒபன்டெக்ஸ்ட், பேர் ஐசக் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

 மும்பை பல்கலைக்கழகம்

மும்பை பல்கலைக்கழகம்

ஆனந்த் ஈஸ்வரன் மும்பை பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டம் பெற்று, மிசோரி-கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதே துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 பராக் அகர்வால், லீனா நாயர்

பராக் அகர்வால், லீனா நாயர்

சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தில் பராக் அகர்வால், Chanel நிறுவனத்தில் லீனா நாயர் எனப் பலர் அமெரிக்க மற்றும் சர்வதேச நிறுவனத்தில் இந்தியர்கள் உயர் பதவியைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் நியமிக்கத் தென் ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்களின் சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முக்கியமான நோக்கத்திற்காக இருக்கலாம்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பாக இந்தியர்களை உயர் பதவியில் உட்கார வைக்க இதுவும் முக்கியக் காரணம்..?அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பாக இந்தியர்களை உயர் பதவியில் உட்கார வைக்க இதுவும் முக்கியக் காரணம்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Eswaran as New CEO of US based Veeam Software

Anand Eswaran appointed as New CEO of US based Veeam Software ஆனந்த் ஈஸ்வரன்.. அமெரிக்க நிறுவனத்தின் அடுத்த இந்திய சீஇஓ..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X