IronMan ஆக மாறிய கல்லூரி மாணவர்.. ஆனந்த் மஹிந்திரா செய்த உதவி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணிப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அயன்மேன் படத்தில் இடம்பெற்ற இரும்பு சூட்டை, இரும்புக்கழிவுகள் மூலம் செய்துள்ளார்.

இதனை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பாராட்டிய பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அந்த இளைஞர் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்தார்.

தற்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் அவர் செய்த சாதனைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ? வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

சமூக ஊடகங்களின் பதிவு செய்யும் சில பதிவுகள் ஈடு இணையற்றது என்பது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் பல பதிவுகள் உறுதி செய்துள்ளன. அந்த வகையில் சமீபத்திய அவர் செய்த ஒரு பதிவு ஒரு கல்லூரி மாணவரின் வாழ்க்கையை திருப்பத்திற்கு உள்ளாக்கியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மணிப்பூரைச் சேர்ந்த இளைஞரான பிரேம் பற்றிய திறமையை கடந்த ஆண்டு பகிர்ந்து இருந்தார். அந்த இளைஞர் இரும்பு ஸ்கிராப்பில் இருந்து அயர்ன் மேன் சூட்டை உருவாக்கியதற்காக சமூக ஊடகங்களில் வைரலானார்.

மீண்டும் பதிவு

மீண்டும் பதிவு

ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் தொழிலதிபர் மஹிந்திரா தனது முந்தைய பிரேம் குறித்த பதிவை பகிர்ந்துகொண்டு, "உங்களில் பலருக்கு பிரேமின் கதை நினைவிருக்கலாம். அவர் இப்போது பொறியியல் மாணவராக உள்ளார். மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான எங்கள் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். கடந்த கோடையில் அவர் மஹிந்திராவின் ஆட்டோ டிசைன் ஸ்டுடியோவில் பயிற்சி பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

அயன்மேன் சூட்

அயன்மேன் சூட்

சாலையோரத்தில் பூரி மற்றும் பஜ்ஜி கடை போட்டு வாழ்க்கையை ஓட்டி வந்த அவரது பெற்றோர் அவருக்கு பெரிதும் ஊக்கம் கொடுத்தனர். உனக்கு என்ன தோணுகிறதோ அதை செய் என்று அவர்கள் ஊக்கம் கொடுத்ததால் ஹாலிவுட் படங்களில் வரும் ரோபோக்களை போல் அவர் செய்ய தொடங்கினார். அவற்றில் ஒன்று தான் இரும்பு ஸ்கிராப்களால் செய்யப்பட்ட அயன்மேன் சூட். ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த சூட் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இரும்பு ஸ்கிராப்கள்

இரும்பு ஸ்கிராப்கள்

பல ஹாலிவுட் படங்களை பார்த்து அவர் இதுவரை எத்தனை ரோபோட்கள் செய்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு அவர் ரோபோட்க்களை சின்ன சின்ன இரும்பு ஸ்கிராப்கள் மூலமே அவர் பெரிய செலவுகள் இன்றி செய்தார்.

உதவி

உதவி

இதுகுறித்து அவர் சமூகத்தில் பகிர தொடங்கிய பின்னர்தான் அவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கண்ணில் பட்டார். அதன்பின் அவர் ஆனந்த் மஹிந்திராவின் உதவியால் இன்று மிகப்பெரிய உயரத்தில் உள்ளார். தற்போது இளைஞர் பிரேம் கோடைகால இன்டர்ன்ஷிப்பை முடித்து இருப்பதாகவும் மேலும் பல சாதனைகளை அவர் படைக்க தன்னால் முடிந்த உதவியை செய்ய இருப்பதாகவும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra shares update on Manipur teen who made Iron man suit

Anand Mahindra shares update on Manipur teen who made Iron man suit | அயன்மேன் ஆக மாறிய கல்லூரி மாணவர்.. ஆனந்த் மஹிந்திரா செய்த உதவி!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X