இந்த குழந்தை ஐநா அமைதி தூதர் ஆக வேண்டும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ஒரு சிறுவன் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரிடமும் வணக்கம் தெரிவிப்பது போன்ற காட்சியுடன் தொடங்குகிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும், ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கப்போரா? ஆனந்த் மஹிந்திரா-வின் ட்விட் செம டிரெண்ட்..! ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கப்போரா? ஆனந்த் மஹிந்திரா-வின் ட்விட் செம டிரெண்ட்..!

ஆனந்த் மஹிந்திரா வீடியோ

ஆனந்த் மஹிந்திரா வீடியோ

தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவில், 'விமானத்தில் ஏறிய ஒரு சிறுவன் ஒவ்வொரு பயணியையும் கடந்து செல்லும்போது தனது கைகளை அசைத்து அனைவருக்கும் ஹாய் சொல்கிறார். இந்த குழந்தையின் இந்த நடத்தையால் பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து அந்த சிறுவனுக்கு மகிழ்ச்சியுடன் திரும்ப ஹாய் சொன்னார்கள். இந்த வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்அவர்களுக்கும் டேக் செய்துள்ளார்

உலகம் எப்படி இருக்க வேண்டும்

உலகம் எப்படி இருக்க வேண்டும்

இந்த உலகம் அடிக்கடி மோதல் நிறைந்ததாக இருக்கிறது என்றும், குறிப்பாக ரஷ்யாவின் போர் பல துயரங்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கிறது என்றும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார். இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த குழந்தை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்

அமைதிக்கான ஐநா தூதர்

அமைதிக்கான ஐநா தூதர்

இந்த குறுநடை போடும் குழந்தை எதிர்காலத்தில் அமைதி மற்றும் நல்லெண்ண தூதராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஆனந்த் மஹிந்திரா ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குவிந்த லைக்ஸ்

குவிந்த லைக்ஸ்

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டரில் பகிர்ந்த இந்த வீடியோ ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளதோடு, ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர் என்பதும் பலர் தங்களது உணர்ச்சிகரமான கமெண்ட்ஸ்களை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கமெண்ட்ஸ்

கமெண்ட்ஸ்

ஒரு காலத்தில் நாம் எல்லோரும் குழந்தைகளாக தான் இருந்தோம், ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் நம்மில் பலர் அன்பை வெளிப்படுத்தாமல் வெறுப்பை விதைக்கின்றோம் என்றும், இந்த குழந்தை நமக்கு மீண்டும் அன்பை போதிக்கிறது என்று ஒரு பயனர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துள்ளார்.

குழந்தையின் செயல்

குழந்தையின் செயல்

இன்னொரு பயனர் இந்த குழந்தை பெரியவர்களுக்கு ஒருவரோடு ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார். புன்னகை, மகிழ்ச்சி பரப்பும் ஒரு எளிய செயல் தான் இந்த குழந்தையின் செயல் என்று அந்த குழந்தையின் பெற்றோருக்கு பாராட்டு என்றும் இன்னொரு பயனர் பதிவு செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra Wants This kid To Be made UN Ambassador For Peace, Here Is the reason!

Anand Mahindra Wants This kid To Be made UN Ambassador For Peace, Here Is the reason! | இந்த குழந்தை ஐநா அமைதி தூதர் ஆக வேண்டும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ
Story first published: Monday, September 26, 2022, 6:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X