அதானி, அம்பானியின் புதிய புரட்சி.. இந்தியாவின் அடுத்த சகாப்தம் எப்படியிருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு பில்லியனரான கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், அதன் புதிய துணை நிறுவனமான ANIL- ஐ (அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) அறிமுகம் செய்துள்ளது.

Recommended Video

Ready For An ANIL- Ambani's 'Renewable' Revolution | OneIndia Tamil
 

இது அதன் புதுபிக்கதக்க எரிசக்தி (renewable energy) வணிகத்தினை கையாளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு தொழிலதிபரான முகேஷ் அம்பானியும், கெளம் அதானியும் புதுபிக்கதக்க ஆற்றல் எனர்ஜி வணிகத்தில் நுழையும் இருபெரும் தூண்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாபெரும் புரட்சி

மாபெரும் புரட்சி


இவர்களின் இந்த புதிய வணிகமானது இந்தியாவில் மாபெரும் புரட்சியினை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ANIL) என்பதன் சுருக்கமாகும். இந்த நிறுவனம் குறைந்த கார்பன் எரிபொருட்கள், குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட மின்சாரத்தினை உருவாக்குதல் மற்றும் உற்பத்திக்கான முக்கிய மூலதன பொருட்கள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொடர்பான உற்பத்தி பொருட்கள், மின்சார உற்பத்தி சம்பந்தமான பொருட்கள், காற்றாலைகள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

இது மட்டும் அல்ல அனில் (Adani New Industries Ltd) நிறுவனம் சோலார் பேனல்கள், பேட்டரிகள், எலக்ட்ரோலைசர்கள், இதனுடன் தொடர்புடைய பொருட்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது. அதானி குழுமம் ஏற்கனவே உலகின் மிகப்பெரிய சோலார் பவர் டெவலப்பர் நிறுவனமாகும்.

எவ்வளவு முதலீடு
 

எவ்வளவு முதலீடு

அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் 45 ஜிகாவாட் புதுபிக்கதக்க ஆற்றல் இலக்கினை கொண்டுள்ளது. இதற்காக 20 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்யவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்தது. இதன் மூலம் 2022 - 23ம் ஆண்டில் தினசரி 2GW சோலார் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும்.

இலக்கு

இலக்கு

இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் சில்லறை விற்பனையாளராகவும் இருக்கும். தற்போதுள்ள 3% புதுபிக்க ஆற்றலை, 2023ம் நிதியாண்டில் 30% ஆகவும், 2030ல் 70% ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

 முகேஷ் அம்பானியின் இலக்கு

முகேஷ் அம்பானியின் இலக்கு

இதே ஆசியாவின் மிகப்பெரிய பில்லியனராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட்-ஐ (RNESL - Reliance New Energy Solar Ltd) அறிமுகப்படுத்தியுள்ளது.

RNESL ஆனது சூரிய ஆற்றல், பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் வணிகங்களில் முதலீடுகள் மற்றும் கையகப்படுத்தல்களை செய்யும். ரிலையன்ஸ் நிறுவனம் 2030-க்குள் 100 ஜிகாவாட் இலக்கினை கொண்டுள்ளது. இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாய் முதலீட்டினை இலக்காக கொண்டுள்ளது.

 

1 டாலருக்கு ஹைட்ரஜன்

1 டாலருக்கு ஹைட்ரஜன்

கடந்த ஆண்டு உலக நாடுகளே ஆச்சரியப்படும் விதமாக ஒரு கிலோ ஹைட்ரஜனை, 1 டாலருக்கு உற்பத்தி செய்ய அம்பானி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது ஹைட்ரஜனில் கார்பன் உமிழ்வு என்பது இல்லை. ஆக கார்பன் உமிழ்வை குறைக்க தொழில் மற்றும் வாகனங்களில் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என அம்பானி அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil (Adani), India preparing for Ambani revolution

Anil (Adani), India preparing for Ambani revolution/அனில் (அதானி), அம்பானி புரட்சிக்கு தயாராகும் இந்தியா.. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X