பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காகவும், புதிய வளர்ச்சி திட்டங்களுக்காகத் தேவைப்படும் நிதியைத் திரட்டும் நோக்கில் பல அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் 2வது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், வருடம் 8000 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே அளிக்கும் மாபெரும் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இதன் படி அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்து இந்தப் பங்குகளை வாங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த சில வருடமாகப் பல புதிய வர்த்தகத்திற்குள் நுழைந்து வரும் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் BPCL நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
LVB பங்குகள் 2 நாளில் 40% சரிவு.. உச்சக்கட்ட சோகத்தில் முதலீட்டாளர்கள்..!

ஏமாற்றம்
மத்திய அரசின் அறிவிப்பு பின்பு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. பன்னாட்டுக் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் முதல் உள்நாட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வரையில் BPCL நிறுவனப் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை.

4வது முறை நீட்டிப்பு
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு 4வது முறை விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்-ஐ நீட்டிக்கப்பட்டு நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்காத நிலையில் ரிலையன்ஸ் களத்தில் இறங்கும் எனச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

நவம்பர் 16
BPCL பங்குகளை வாங்க கடைசி நாள் நவம்பர் 16ஆம் தேதி 3 முதல் 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்த உள்ளனர் என மத்திய நிதியமைச்சகம் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், எந்தெந்த நிறுவனங்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளது என்பது தெரியாமல் இருந்தது.

வேதாந்தா குழுமம்
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் தனது நிறுவனத்தின் சார்பாகப் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை வாங்க விருப்ப விண்ணப்பம் கொடுத்துள்ளதாக வேதாந்தா குழுமம் தற்போது தெரிவித்துள்ளது.

மத்திய அரசு
BPCL பங்குகளை வாங்குவதற்குக் கடைசி நாள் நவம்பர் 16ஆம் தேதி 3 முதல் 4 விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதை மத்திய அரசு காலம் கடத்தாமல் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் முடிவிற்கு வந்து. இந்தப் பங்குகளை வாங்க விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து விதமான தகுதிகளும் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.

புதிய வர்த்தகத் துறை
டிசம்பர் 2011ஆம் ஆண்டு வேதாந்தா குழுமம் Cairn India நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல புதிய வர்த்தகத்திற்குள் நுழைந்து வருகிறது. தங்க சுரங்கம், ஸ்டீல் உற்பத்தி எனப் பல புதிய துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது அனில் அம்பானி தலைமையிலான வேதாந்தா குழுமம்.

ரூ.1.25 லட்சம் கோடி கடன்
வேதாந்தா குழுமம் தற்போது பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற முடிவு செய்து அதற்கான பணியில் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் தற்போது 1.25 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருக்கிறது, இந்த நிலையில் BPCL நிறுவனத்தைக் கைப்பற்றுவதும் அதை நிலையான முறையில் நிர்வாகம் செய்வதும் வேதாந்தா குழுமத்திற்குச் சவாலான காரியமாக இருக்கும்.