பாவம் அனில் அம்பானி... கடனை அடைக்க அந்த வியாபாரத்தையும் விற்கிறாராம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு குடும்பத்தில், எப்போதும் ஒருவர் தான் டாப்பாக வருவார், மற்றவர்கள் எல்லாம், ஓரளவுக்கு தான் வாழ்வார்கள் எனச் சொல்வார்கள்.

அது அப்படியே நம் அம்பானி சகோதரர்களுக்குப் பொருந்தும். அண்ணன் ஆசியாவிலேயே பெரிய பணக்காரனாகிக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் தம்பியோ, வாங்கிய கடன்களை அடைக்க, தன் சொத்து பத்துக்களை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டு இருக்கிறார். படிக்கவே மிகவும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. இப்போது அப்படி ஒரு செய்தியைத் தான் பார்க்கப் போகிறோம்.

மின்சாரம்

மின்சாரம்

இப்போது தன் மின்சார வியாபாரத்தில் நல்ல வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் டெல்லி மின் பகிர்மான கம்பெனிகளை விற்க முன் வந்து இருக்கிறார் அனில் அம்பானி. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனியின் கீழ் BSES Rajdhani Power Ltd (BRPL) மற்றும் BSES Yamuna Power Ltd (BYPL) என இரண்டு கம்பெனிகள் இருக்கின்றன.

44 லட்சம் பேர்

44 லட்சம் பேர்

இந்த இரண்டு கம்பெனிகளும், சுமாராக டெல்லியில் இருக்கும் 4.4 மில்லியன் (44 லட்சம்) பேருக்கு மின்சாரத்தை வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த முக்கிய சொத்துக்களை விற்று, வரும் வருமானத்தில், அனில் அம்பானி, தன் கடனை அடைக்க இருக்கிறாராம்.

கே பி எம் ஜி

கே பி எம் ஜி

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், மேலே சொன்ன இரண்டு நிறுவனங்களிலும் 51 % பங்குகளை விற்க, கே பி எம் ஜி என்கிற இந்தியாவின் முக்கியமான ஆடிட்டிங் மற்றும் ஆலோசனை கம்பெனியை நாடி இருக்கிறது. கே பி எம் ஜி தான் மேலே சொன்ன 2 கம்பெனிகளில் 51 % பங்குகளை வாங்கிக் கொள்ளும் கம்பெனியைக் கண்டு பிடிப்பார்களாம்.

அதானிக்கு போச்சு

அதானிக்கு போச்சு

ஏற்கனவே மும்பை நகரத்தில் 2018-ம் ஆண்டுக்கு வரை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி தான் மின்சாரத்தை சப்ளை செய்து கொண்டு இருந்தன. ஆனால், கடந்த ஆகஸ்ட் 2018-ல் அதானிக்கு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மும்பை மின் பகிர்மான வியாபாரத்தை விற்றுவிட்டார் அனில் அம்பானி.

சுமார் 8 பேர்

சுமார் 8 பேர்

இப்போது, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனியின், டெல்லி நகரத்தின் மின் பகிர்மான வியாபாரத்தை வாங்க,
Caisse de dépôt et placement du Québec (CDPQ),
Actis LLP,
Brookfield Asset Management,
Greenko Energy Holdings, Enel Group,
I Squared Capital,
Torrent Power,
Wade Capital Group LLC போன்ற கம்பெனிகள் ஆர்வம் காட்டுவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

0 கடன்

0 கடன்

கடந்த மே 08, 2020 அன்று தான் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனியின் காலாண்டு முடிவுகள் வெளியாயின. அப்போது "எல்லா லிக்விடிட்டி வேலைகளும் சரியாக நடந்தால், அடுத்த நிதி ஆண்டுக்குள் ரிலையன்ஸ் இண்ஃப்ராஸ்ட்ரக்சர் 0 கடன் கம்பெனியாக இருக்கும். அதுவே எங்கள் இலக்கு" எனச் சொல்லி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil ambani is going to sell delhi power distribution business to repay debt

The unfortunate billionaire anil ambani has hired KPMG company to sell its Delhi power distribution business. Reliance Infrastructure is going to sell Delhi power distribution business major stakes.
Story first published: Tuesday, May 12, 2020, 10:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X