ஆண்டுக்கு 48,000 கோடி லஞ்சம்! அதிர்ச்சி கொடுக்கும் ஆராய்ச்சி முடிவுகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக சாலையில், நம் வாகனத்தில் பயணிக்கும் போது, போக்குவரத்து போலீசார் மடக்கி விசாரிப்பது எல்லாம் சாதாரணம் தான்.

 

ஆனால் லாரி, டிரக் போன்ற வாகனங்களை மடக்கினால் அவர்கள் என்ன செய்வார்கள்?

லஞ்சம் வாங்குவார்களா? என்பதை எல்லாம் ஒரு ஆராய்ச்சி முடிவுகள் புட்டு புட்டு வைத்திருக்கிறது.

அமைப்பு

அமைப்பு

SaveLife Foundation என்கிற லாப நோக்கு இல்லாத அமைப்பு, ஒரு ஆராய்ச்சி செய்து இருக்கிறது. இந்தியாவின் முக்கியமான 10 போக்குவரத்து ஹப்களில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி முடிவுகளில் தான் ஒட்டு மொத்த அரசு அதிகாரிகளும் வெட்கித் தலை குனிய வேண்டிய அளவுக்கு முடிவுகள் வந்து இருக்கின்றன.

தகவல்கள்

தகவல்கள்

இந்த ஆராய்ச்சி முடிவுகளை, மத்திய சாலை போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி வி கே சிங் வெளியிட்டார். அதில் 67 சதவிகித ஓட்டுநர்கள் சாலை போக்குவரத்து காவலர்கள் அல்லது ஹைவே காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார்கள்.

யார் அதிகம்
 

யார் அதிகம்

இந்தியாவிலேயே கெளஹாத்தி பகுதியில் வாகனம் ஓட்டுபவர்களில் 97.5 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் நம் சென்னை இடம் பிடித்து இருக்கிறது. 89 சதவிகித ஓட்டுநர்கள் லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம். 84.4 சதவிகித டெல்லி ஓட்டுநர்கள் லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம்.

கடைசி டிரிப்பில் கொடுத்தீர்களா

கடைசி டிரிப்பில் கொடுத்தீர்களா

ஓட்டுநர்கள் போன கடைசி ட்ரிப்பில், 82 சதவிகிதம் பேர் ஏதோ ஒரு அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன், அரசு அதிகாரிகள் போக, சில லோக்கல் குரூப்கள் கூட 25 சதவிகித ஓட்டுநர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாகச் சொல்கிறார்கள். ஒரு ட்ரிப்புக்கு சராசரியாக 1,257 ரூபாய் லஞ்சம் கொடுக்கிறார்களாம்.

ஆர் டி ஓ லஞ்சம்

ஆர் டி ஓ லஞ்சம்

போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஹைவே அதிகாரிகள் போக, ஆர் டி ஓ அலுவலகங்களில் கூட 44 சதவிகித ஓட்டுநர்கள் லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம். பெங்களூரில் 94 % ஓட்டுநர்கள் ஆர் டி ஓ-க்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம். கெளஹாத்தியில் 93.4 சதவிகிதம் ஓட்டுநர்கள் ஆர் டி ஓ-க்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம்.

மேற்படி லஞ்சம்

மேற்படி லஞ்சம்

ஒட்டு மொத்தத்தில் 47 சதவிகித ஓட்டுநர்கள் தங்களில் ஓட்டுநர் உரிமத்தை ரெனிவல் செய்யக் கூட லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம். மும்பையில் அதிகபட்சமாக 93 % ஓட்டுநர்கள், தங்கள் உரிமத்தை ரெனிவல் செய்ய லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம். 83 % கெளஹாத்தி ஓட்டுநர்கள் உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் கொடுத்து இருக்கிறார்களாம்.

48,000 கோடி

48,000 கோடி

இப்படியாக லாரி மற்றும் ட்ரக் ஓட்டுநர்கள் மற்றும் ஓனர்கள், ஆண்டுக்கு சுமார் 48,000 கோடி ரூபாயை லஞ்சமாக வாரி வழங்கிக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது Save Life Foundation அமைப்பின் ஆராய்ச்சி முடிவுகள். லஞ்சத்தை ஒழித்தாலே சில பொருளாதார பிரச்னைகளும் சரியாகிவிடும் போல் இருக்கிறதே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

annually 48000 crore paid as bribe by the trucker and transport owners

The truck owners and truck drivers are paying around Rs. 48,000 crore annually to the government authorities and informal local groups.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X