ரூ.25 கோடி லாட்டரி பரிசு வென்றவர் செய்த காரியத்தைப் பாத்தீங்களா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா-வை சேர்ந்த 30 வயதான அனூப் என்பவர் அம்மாநில லாட்டரி துறையிலிருந்து விற்பனை செய்யப்படும் லாட்டரி மூலம் 25 கோடி ரூபாய் பணத்தை வென்றுள்ளார்.

லாட்டரியில் பரிசு அதுவும் 25 கோடி ரூபாய் பரிசு என்பதெல்லாம் வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வெற்றி, அதிர்ஷ்டம் என்று கூறினால் மிகையில்ல. இந்த நிலையில் 25 கோடி ரூபாய் பரிசு வென்ற அனூப் பந்தயம் கட்டும் தொழிலில் இறங்க முடிவு செய்துள்ளது கேரள மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படும் அனூப் 25 கோடி ரூபாய் பரிசு வென்ற பின்பும் செய்தது என்ன தெரியுமா..?

1 லட்சம் பணம், 400சதுரடி அலுவலகத்தில் துவங்கிய VGuard.. இன்று மாபெரும் வளர்ச்சி..! 1 லட்சம் பணம், 400சதுரடி அலுவலகத்தில் துவங்கிய VGuard.. இன்று மாபெரும் வளர்ச்சி..!

 லாட்டரி

லாட்டரி

லாட்டரி வாங்குவதும், விற்பனை செய்வதும் தவறு என்பதால் பல மாநிலங்களில் இது தடை செய்யப்பட்டு இருக்கும் வேளையில், கேரளாவில் பல ஆண்டுகளாக அம்மாநில அரசு கட்டுப்பாட்டில் இந்த லாட்டரி வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் அனூப் செய்தது என்ன தெரியுமா..?

லட்டரியில் அதிர்ஷ்டம்

லட்டரியில் அதிர்ஷ்டம்

பொதுவாக லாட்டரி மூலம் பெரும் தொகையை வென்றால் கடன்களை அடைத்துவிட்டு வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்க்கையை வாழவும், பெரிய அளவில் செட்டில் ஆவதும் தான் பலரின் எண்ணமாக இருக்கும். பலர் இந்த லாட்டரி பணத்தை வைத்துப் புதிதாகத் தொழில் துவங்குவதும் வழக்கம் அப்படி அனூப் துவங்கிய தொழில் எது தெரியுமா..?

 கேரளா அனூப்

கேரளா அனூப்

கேரளா-வை சேர்ந்த 30 வயதான அனூப் 25 கோடி ரூபாய் பரிசு வென்ற பின்பு தொடுபுழாவில் உள்ள மணக்காடு சந்திப்பில் சொந்தமாக லாட்டரி கடையைத் திறந்துள்ளார். எம்.ஏ லக்கி சென்டர் என்று பெயரிடப்பட்டு இந்தக் கடையை அனூப் திறந்துள்ளார்.

25 கோடி ரூபாய் பரிசு

25 கோடி ரூபாய் பரிசு

எங்குத் தொலைத்தோமோ அங்கே தான் தேட முடியும் என்பது போல் தன் வாழ்நாளில் லாட்டரி வாங்குவதற்காகச் செலவிட்ட தொகையைத் திரும்பப் பெறுவது மட்டும் அல்லாமல் தனது வாழ்க்கையை லாட்டரி விற்பனை மூலம் புதிதாகத் துவங்க எம்.ஏ லக்கி சென்டர் என லாட்டரி கடையைத் திறந்து லாட்டரி விற்பனையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

லாட்டரி விற்பனை சென்டர்

லாட்டரி விற்பனை சென்டர்

அனூப் தனது பெயரின் முதல் எழுத்தையும் தனது மனைவி மாயாவின் பெயரின் முதல் எழுத்துக்களுடன் இணைத்து, இந்தக் கடையைத் திறந்துள்ளார். பலர் இதை முட்டாள்தனமான முடிவாகப் பார்த்தாலும் பலர் இதை மாறுபட்ட யோசனையாகப் பார்க்கின்றனர்.

லாட்டரி வியாபாரம்

லாட்டரி வியாபாரம்

ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் அனூப், லாட்டரி மூலம் 25 கோடி ரூபாய் வென்ற நிலையில் லாட்டரி தனது அதிர்ஷ்டமாக இருப்பதாகக் கூறி லாட்டரி வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளார்.

5000 ரூபாய் பரிசு

5000 ரூபாய் பரிசு

ஓணம் பம்பர் பரிசான 25 கோடி ரூபாய் பணத்தை வென்ற பிறகும், அவர் தனது அதிர்ஷ்டத்தை மீண்டும் பரிசோதனை செய்ய லாட்டரியை வாங்கிய நிலையில் இதிலும் 5000 ரூபாய் வரை பரிசுகளை வென்றார்.

வீட்டை விட்டு எஸ்கேப்

வீட்டை விட்டு எஸ்கேப்

அனூப் ஓணம் பம்பர் லாட்டரியை வென்ற பிறகு தனக்கு நெருங்கியவர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் உட்படப் பலர் நிதி உதவி கோரி அனூப் வீட்டுக்கு அடுத்தடுத்து வந்த காரணத்தால் அனூப் பல வாரங்களாகத் தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புதிய வீடு

புதிய வீடு

இதனால் தற்போது இருக்கும் வீட்டை விடுத்து வேறு வீட்டுக்கு நகரத்தின் வேறு பகுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியது. இதேவேளையில் தான் லாட்டரி சீட்டுகளை விற்கும் முடிவையும் எடுத்தார்.

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

அனூப் கடையைத் திறந்த முதல் நாளில், பெரும் பரிசை வென்ற நபரின் கையிலிருந்து லாட்டரிகளை வாங்க பல வாடிக்கையாளர்கள் அவரது கடைக்கு விரைந்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. லாட்டரி வாங்குவதை ஒருபோதும் யாரும் ஊக்கப்படுத்தக் கூடாது, இது எப்போதும் சிறந்த முதலீட்டு முடிவாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வரி

வரி

அனூப் ஓணம் பம்பர் லாட்டரியை வென்ற நிலையில் பரிசு தொகையான 25 கோடி ரூபாய் முழுவதையும் அனூப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரி விலக்குகளுக்குப் பிறகு, 30 வயதான அவர் கிட்டத்தட்ட ரூ.12 கோடியைப் பெற முடிந்தது. மேலும், அனூப் வருமான வரியாகச் சுமார் ரூ.3 கோடி செலுத்த வேண்டியிருந்தது. கேரள மாநில லாட்டரித் துறை ஒவ்வொரு நாளும் தனது அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை அறிவிக்கிறது.

வறுமையில் பீடி சுற்றியவர் இன்று அமெரிக்காவில் ஜட்ஜ்..! வறுமையில் பீடி சுற்றியவர் இன்று அமெரிக்காவில் ஜட்ஜ்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anoop wins Rs 25 Crore Kerala Onam bumper lottery, now sells Lottery to others in his lucky hands

Anoop wins Rs 25 Crore Kerala Onam bumper lottery, now sells Lottery to others in his lucky hands
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X