இந்தியாவில் சிறுபான்மையினர் குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், குறிப்பாக அன்னிய முதலீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜஹாங்கிர்புரி சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், இதுபோன்ற செயல்கள் நாட்டின் எதிர்காலத்திற்குப் பாதிப்பு என ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
anti-minority முகம்
இந்தியாவில் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து அரசும், அரசு அமைப்புகளும் எடுக்கும் நடவடிக்கைகள் இந்திய பொருட்களுக்கான வர்த்தக இழப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவில் இந்த anti-minority முகம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதிலும் பெரும் பிரச்சனையாக இருக்கும். மேலும் இந்தியா நம்பகத்தன்மையற்ற கூட்டணி நாடாகவும் உலகளவில் பார்க்கப்படும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன்
இந்தியா வலிமையான வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டிய நிலையில், நாட்டின் அடிப்படையான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவது இந்தியாவுக்குத் தான் பெரிய இழப்பு எனச் சிகாகோவின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் பேராசிரியராக இருக்கும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக
ஜனநாயகம் அடிப்படையில் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே மனநிலையில் நடத்தினால் கட்டாயம் சர்வதேச சந்தையில் இந்தியா மீதும், இந்திய தயாரிப்புகள் மீது மதிப்பு அதிகரிக்கும். இதனால் தானாக இந்தியாவின் வர்த்தகம் உலக நாடுகளில் அதிகரிக்கும்.
முக்கியத் துறைகள்
இந்திய தற்போது ஐடி, சேவை, பார்மா எனப் பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து ஆதிக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற Anti-minority முகம் இந்திய நிறுவனங்களைப் பாதிப்பதை மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகம் பெறுவதில் கடினமாகும்.
நட்பு நாடுகள்
இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகள் தங்களது நட்பு நாடுகளை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றை முக்கியக் காரணியாக கொண்டு தான் முடிவு செய்கிறது. சமீபத்தில் இதற்கு உதாரணமாக சீனா - உய்கர் முதல் தாலிபான்கள் வரையில் பலவற்றைக் குறிப்பிட முடியும் என ரகுராம் ராஜன் டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார்.
டெல்லி சம்பவம்
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. வன்முறையைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆக்கிரமிப்பு இடங்களை இடிக்க 14 குழு, 9 புல்டோசர், 1500 போலீசார் ஈடுபட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
ஜஹாங்கிர்புரி
ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து , 2 மணிநேரத்திற்குப் பின்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. டெல்லி வடக்கு மாநகராட்சியின் அதிகாரம் என்பது பாஜகவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மக்கள்
இதனால் ஜஹாங்கிர்புரி பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முதல் சாமானிய மக்கள் வரையில் விமர்சனம் செய்து வருகின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications