ரூ.2000 நோட்டு நிறுத்தப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன.. அனுராக் தாக்கூர் விளக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த அரசல் புரசலான பல கருத்துகள் வெளியாகி வருகிறன்றன. குறிப்பாக அரசாங்கம் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகவும் சமீபத்திய தகவல்கள் கூறின.

இது குறித்து மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய இணை நிதியமைச்சரின் இந்த அறிக்கையானது, இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் தாள்களை, அச்சிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வந்தததைத் தொடர்ந்து இந்த விளக்கம் வந்துள்ளது.

ஒரே நாளில் வெள்ளி விலை தட தடவென ரூ.6,400 வீழ்ச்சி.. தங்க நகை விலை எவ்வளவு தெரியுமா?

எந்த முடிவும் எடுக்கப்படவில்லை?
 

எந்த முடிவும் எடுக்கப்படவில்லை?

அதில் அரசு தரப்பில் 2000 ரூபாய் தாள்கள் பற்றிய எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது அறிக்கையில் 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளில் 2000 ரூபாய் நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் 2000 ரூபாய் தாள்களை அச்சிடுவதை நிறுத்துவது குறித்தும், இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

புழக்கத்தில் எத்தனை லட்சம் நோட்டுகள்?

புழக்கத்தில் எத்தனை லட்சம் நோட்டுகள்?

மார்ச் 31, 2020 நிலவரப் படி, நாடு முழுவதிலும் மொத்தம் 27,398 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதுவே 31 மார்ச் 2019 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 32,910 லட்சம் 2000 ரூபாய் தாள்களாகவும் இருந்தது. கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, ரிசர்வ் வங்கி தற்காலிகமாக ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியது.

அச்சிடும் பணி மீண்டும் தொடக்கம்

அச்சிடும் பணி மீண்டும் தொடக்கம்

எனினும் தற்போது கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை, பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரவேட் லிமிடெட் (Bhartiya Reserve Bank Note Mudran Private Limited) மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தாக்கூர் கூறியுள்ளார். இது கடந்த மார்ச் 20,2020 முதல் மே 3, 2020 வரையில் அச்சிடும் பணியை நிறுத்தி வைத்திருந்த நிலையில், மே 4, 2020 அன்று மீண்டும் தொடங்கப்பட்டது என்றும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டுகள் அச்சிட தொடக்கம்
 

ரூபாய் நோட்டுகள் அச்சிட தொடக்கம்

இதே போல் கோவிட் 19 தொற்றுநோயால் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது பாதிக்கப்பட்டுள்ளதாக செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) தெரிவித்துள்ளது என நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இவற்றோடு நாசிம் மற்றும் பேங்க் நோட் பிரஸ் இரண்டும் லாக்டவுன் காரணமாக மார்ச் 23,2020 முதல் மூடப்பட்டன, எனினும் முறையே ஜூன் 8 மற்றும் ஜூன் 1ல் மீண்டும் அச்சிட தொடங்கியுள்ளன என்றும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anurag thakur says no decision taken so far stopping the printing Rs.2000

There is no decision taken yet to stop of Rs.2000 notes, says anuraq thakur
Story first published: Tuesday, September 22, 2020, 19:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?