ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய செருப்பு விலை என்ன தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றித் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது, பல முன்னணி மற்றும் இளம் தலைமுறை நிறுவனத் தலைவர்களுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் தான் முன்மாதிரி.

சினிமா பிரபலங்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே அளவிற்கு ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவருடைய தலைமையில் உருவான ஆப்பிள் ப்ராடெக்ட்ஸ் இன்று வரையில் யாராலும் பீட் செய்ய முடியாத அளவிற்குப் பிரபலமாக உள்ளது.

இவருடைய திறமை, சாதனைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இந்த நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செருப்புத் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. விலை என்ன தெரியுமா..?!

ஆப்பிள் ஐபோன் 14 குறித்து ஸ்டீவ் ஜாப் மகளின் மீம்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க! ஆப்பிள் ஐபோன் 14 குறித்து ஸ்டீவ் ஜாப் மகளின் மீம்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 1970கள் மற்றும் 80களில் அணிந்ததாகக் கூறப்படும் பிர்கென்ஸ்டாக் செருப்புத் தற்போது ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு ஏலத்திற்கு வந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் பல முக்கியமான தருணங்களில் இந்தச் செருப்பைத் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்திருந்தார் என்று கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் கூறியுள்ளது.

22,500 டாலர்

22,500 டாலர்

இந்தச் செருப்புகளுக்கு 60,000 முதல் 80,000 டாலர் வரையிலான விலைக்கு ஏலம் போகும் எனக் கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதுவரை 22,500 டாலருக்கு மட்டுமே ஏலம் கோரப்பட்டு உள்ளது. இது கணிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மிகவும் குறைவு என்பதால் ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் நல்ல விலை வரும் வரையில் காத்திருக்க முடிவு செய்துள்ளது.

மார்க் ஷெஃப்

மார்க் ஷெஃப்

1980 களில் கலிபோர்னியாவில் ஸ்டீவ் ஜாப்ஸின் சொத்துக்களை நிர்வகித்த மார்க் ஷெஃப் என்பவரிடம் இந்தப் பிரவுன் கலரில் மெல்லிய தோல் செருப்புகள் முன்பு இருந்தன. தற்போது பல கைகள் மாறி ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் ஏலம் விடுகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

minimalist வாழ்க்கை

minimalist வாழ்க்கை

ஸ்டீவ் ஜாப்ஸ் minimalist வாழ்க்கையை வாழ்பவர் என்பதால் தேவைக்கு அதிகமான பொருட்களை எப்போதும் சேர்த்து வைத்திருக்க மாட்டார். அப்படி ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் தான் பயன்படுத்திய செருப்பைக் குப்பையில் போடும் போது இந்தச் செருப்பைக் காப்பாற்றியதாக மார்க் ஷெஃப் கூறினார்.

கண்காட்சி

கண்காட்சி

உலகெங்கிலும் உள்ள பல கண்காட்சிகளில் ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய இந்தச் செருப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள வரலாற்று அருங்காட்சியகம் வூர்ட்டம்பேர்க்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கால் பதிவு

கால் பதிவு

இந்தப் பிரவுன் நிற செப்பில் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் கால் பதிவு இன்னும் உள்ளது. Birkenstocks செருப்புகளைத் தினசரி பயன்பாட்டுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பினார் என அவரது முன்னாள் கூட்டாளர் கிறிசன் பிரென்னன் 2018 இல் வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

துரத்தியடிக்கப்பட்ட கதை

துரத்தியடிக்கப்பட்ட கதை

ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் அவர் துரத்தியடிக்கப்பட்ட கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள்-க்குப் போட்டியாக இரண்டு நிறுவனத்தை உருவாக்கினார். அதில் ஒன்று பிக்சார், மற்றொன்று NEXT என்னும் கம்ப்யூட்டர் நிறுவனம்.

மீண்டும் சிஇஓ

மீண்டும் சிஇஓ

ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறிய அடுத்தச் சில வருடத்தில் ஆப்பிள் நிறுவனம் பெரும் தடுமாற்றம் அடையவே ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய NEXT நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்குவதாகவும், தான் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வாகவும் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. இதன் மூலம் 1997 ஆம் ஆண்டு ஆப்பிள் சிஇஓ-வாக மீண்டும் ஸ்டீல் ஜாப்ஸ் பதவியேற்றார்,

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple founder Steve Jobs old and used sandals on auction; Check price of Birkenstocks old sandals

Apple founder Steve Jobs old and used sandals on auction; Check price of Birkenstocks old sandals
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X