உலகின் முன்னணி டெக் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பதிலும், அறிமுகத்திலும் புரட்சியைச் செய்தது போல், ஹெட்போன் தொழில்நுட்பத்திலும் தனது ஐபாட் அறிமுகத்தின் போது பெரும் புரட்சியைச் செய்தது. அதன் வடிவம், ஒலியின் துல்லியம், பேஸ் எபக்ட் எனப் பலவற்றைப் பிரமிக்க வைத்தது.
இதன் பின்பு தனது ஹெட்போன் வர்த்தகத்தில் பெரிய அளவில் கவனத்தைச் செலுத்தாமல் இருந்த ஆப்பிள் தற்போது புதிதாக ஒரு ஓவர் தி இயர் ஹெட்போனை அறிமுகம் செய்து டெக் உலகிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக வையர்லெஸ் ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்து பெரும் அளவிலான வாடிக்கையாளர்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஏர்பாட்ஸ்-லேயே முன்னேற்றங்களைச் செய்து வந்தது.
சமீபத்தில் வெளியான ஏர்பாட்ஸ் ப்ரோ அதன் வடிவத்தின் மூலம் பல தரப்புகளின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹெட்போன்ஸ் வாடிக்கையாளர்கள்
இதுநாள் வரையில் ஏர்பாட்ஸ் மீது மட்டுமே கவனம் செலுத்திய ஆப்பிள், ஓவர் தி இயர் ஹெட்போன்ஸ் பயன்படுத்தும் பெரிய வர்த்தகப் பிரிவை மறந்தது. இந்நிலையில் தற்போது புதிதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் என்ற புதிய ஓவர் தி இயர் ஹெட்போன் அறிமுகம் செய்துள்ளது இப்பிரிவு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

டிசம்பர் 15 முதல் விற்பனைக்கு
ஆப்பிள் நிறுவனம் இப்புதிய புதிய ஓவர் தி இயர் ஹெட்போன் ஏர்பாட்ஸ் மேக்ஸ் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து டிசம்பர் 15ஆம் தேதி விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. இந்த ஹெட்போன் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ ரீசெல்லர்-களிடம் மட்டுமே கிடைக்கும்.

ஏர்பாட்ஸ் மேக்ஸ் விலை
ஆப்பிள் பிரியர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்கப்பட்டுள்ள இந்த ஓவர் தி இயர் ஹெட்போன்ஸ் அமெரிக்காவில் 550 டாலருக்கு விற்பனைக்குச் செய்யப்படும் நிலையில், இந்தியாவில் 59,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்க விரும்புவோர் இப்போதே ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்யலாம்.

ஏர்பாட்ஸ் மேக்ஸ்
ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ-வில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. குறிப்பாக ஏர்பாட்ஸ் மேக்ஸ்-ல் ஆக்டீவ் நாய்ஸ் கேன்சல்லேஷன், டிரான்ஸ்பிரென்சி மோட், அடப்டீவ் ஈக்யூ ஆகியவை உள்ளது.
இதேபோல் இந்த ஹெட்போனை ஆப்பிள் வாட்ச் மூலம் கட்டுப்படுத்தும் சேவையும் உள்ளது.