சீனாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் பெரியளவில் இருந்து வரும் நிலையில், அங்கு சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது மேற்கொண்டு சீனாவில் பிரச்சனையை தூண்டியுள்ளது எனலாம்.
கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்த நாட்டின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மீண்டும் மக்கள் மீண்டும் வீடுகளுக்கு முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதரத்தை இழந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.

கட்டுப்பாடுகளால் உயிரிழப்பு
குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு சீனாவின் முக்கியமான ஒரு நகர பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கொரோனா காரணமாகத் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளால் வெளியேற முடியாமல் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகத் சீனாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆலைக்குள் கலவரம்
இதற்கிடையில் தான் கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை சீனாவில் தான் உள்ளது. இந்த ஆலை அமைந்திருக்கும் பகுதியிலும், ஆலைக்குள்ளும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, ஆலைக்குள்ளேயே சில வாரங்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது.

மதில் ஏறி தப்பிய ஊழியர்கள்
இதனால் ஊழியர்கள் மதில் சுவர் ஏறி தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் பரவின. இதனால் வெளியேறிய ஊழியர்களுக்கு இணையாக அதிக சம்பளம், போனஸ் என கவர்ச்சிகரமான அறிவிப்பினை கொடுத்து மீண்டும் குறுகிய காலத்திலேயே பணியமர்த்தியது. எப்படியேனும் உற்பத்தியினை குறைக்காமல் செய்து விட வேண்டும் என குறியாய் இருந்தது.

புதிய ஊழியர்கள் பிரச்சனை
ஆனால் புதியதாய் இணைந்த ஊழியர்களுக்கு சரியான போனஸ் தொகை வழங்கப்படவில்லை. அதோடு ஊழியர்கள் தங்கும் அறைகளில் ஏற்கனவே இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்ள கூறுவதாகவும் கூறப்பட்டது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்த சரியான இடம் என்பது இல்லை என்றும் கூறப்பட்டது. இது ஊழியர்கள் மத்தியில் மீண்டும் கொரோனா பரவாலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியது. இது மேற்கொண்டு பிரச்சனையாய் வெடித்தது.

உற்பத்தி தொடக்கம்
எனினும் அவர்களை சமாதான படுத்தி மீண்டும் உற்பத்தியினை தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. எனினும் சீனாவில் இதுபோன்று அடிக்கடி நிலவி வரும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆப்பிள் சீனாவில் இருந்து உற்பத்தியினை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தியா வியட்நாமில்
ஆப்பிளின் இந்த முடிவானது சமீபத்திய பிரச்சனைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. குறிப்பாக சீனாவில் சென்ஷோ நகரத்தில் உள்ள ஐபோன் ஆலையில் செய்யப்படும் உற்பத்தி மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது ஆசியாவின் வேறு பகுதிக்கு உற்பத்தியினை மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியா மற்றும் வியட்நாமில் இருக்கலாம் என தெரிகிறது.

பாக்ஸ்கான் வேண்டாமா?
அதேபோல தாய்வானின் அசெம்பிள் நிறுவனமான ஃபாக்ஸ்கானினை சார்ந்திருப்பதை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் ஐபோனுக்கு முக்கிய சப்ளையர்களில் ஒன்று ஃபாக்ஸ்கான் தான் என்பது நினைவுகூறத்தக்கது.
இந்தியாவில் ஏற்கனவே தங்களது இருப்பினை வலுப்படுத்த தொடங்கியுள்ள ஐபோன், மேற்கொண்டு இந்தியா மற்றும் வியட்நாமில் தனது கவனைத்தை அதிகரிக்க தொடங்கலாம்.