100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கு ஒப்புதல்.. இனி பொற்காலம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியே ஸ்மார்ட்போன் தயரிப்பு நிறுவனங்கள் தற்போது இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பே சீனாவில் இருந்து வெளியேறிய இந்தியாவில் புதிய உற்பத்தி தளத்தையும், உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களும், பிற முன்னணி நிறுவனங்களின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் வர்த்தகம் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ்-ல் புதிய மாற்றம்.. 15 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு தயாராகும் முகேஷ் அம்பானி..?!ரிலையன்ஸ்-ல் புதிய மாற்றம்.. 15 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு தயாராகும் முகேஷ் அம்பானி..?!

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

ஆப்பிள் ஐபோன்களைத் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்டிரான் ஆகிய 3ஆம் தரப்பு உற்பத்தி நிறுவனங்களும், சாம்சங், கார்பன், லாவா மற்றும் டிக்சன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கும் சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விண்ணப்பங்களை அரசின் empowered group ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

உற்பத்தி திட்டம்

உற்பத்தி திட்டம்

சீனாவில் இருந்து வெளியேறும் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகச் சிறப்பு production linked incentive (PLI) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் விண்ணப்பம் செய்த பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்டிரான், சாம்சங், கார்பன், லாவா மற்றும் டிக்சன் ஆகிய நிறுவனங்களின் 100 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யச் சமர்ப்பித்த விண்ணப்பங்களை empowered group ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாரத்தில் இந்த ஒப்புதலுக்கான இறுதி முடிவு எடுக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எம்பவர் குரூப்

எம்பவர் குரூப்

இந்த empowered group-ல் நிதி அயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட, பொருளாதார விவகாரத் துறையின் செயலாளர்கள், செலவின மற்றும் வருவாய் அமைச்சக தலைவர்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வெளிநாட்டு வர்த்தகத் தலைவர்கள் எனப் பல முக்கிய அமைப்புகள் உள்ளடக்கியது தான் இந்த Empowered Group.

 விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள்

தற்போது ஒப்புதல் பெற்ற விண்ணப்பங்களில்ல 5 விண்ணப்பங்கள் வெளிநாட்டு நிறுவனத்துடையது, 7 இந்திய நிறுவனங்களுடையது, 6 நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடையது எனத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த 18 நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் மதிப்பு தான் 100 பில்லியன் டாலர்.

 

ஆப்பிள் மற்றும் சாம்சங்

ஆப்பிள் மற்றும் சாம்சங்

இந்த ஒப்புதல் மூலம் அடுத்த 5 வருடத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மட்டும் அடுத்த 5 வருடத்தில் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகச் சந்தை

வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகச் சந்தை

மத்திய அரசு தற்போது இறுதி ஒப்புதல் அளிக்கக் காத்திருக்கும் 100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்கள் ஏற்றுமதி ஒப்புந்தம் மூலம் இந்தியாவில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகும். மேலும் அதிகளவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் காரணத்தால் இந்தியாவின் வர்த்தகச் சந்தையும், ரூபாய் மதிப்பும் மேம்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple to Samsung: Govt clears $100-billion worth mobile export proposals

Apple to Samsung: Govt clears $100-billion worth mobile export proposals
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X