டீ, காபி, சிப்ஸ் தரும் ரோபோட்... கூகுளின் அசத்தல் முயற்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீ, காபி, சிப்ஸ் வேண்டுமென்றால் நாம் கடைகளுக்கு சென்று கேட்டால் கடைக்காரர் உடனே ஒரு சில நிமிடங்களில் எடுத்துக் கொடுத்துவிடுவார் என்பது தெரிந்ததே.

 

அதேபோல் ஐடி நிறுவனங்களில் உள்ள கேன்டீனில் உள்ள பணியாளர்களும் ஊழியர்களுக்கு தேவையான தின்பண்டங்களை எடுத்துக் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது புதிதாக ஊழியர்களுக்கு டீ, காபி, சிப்ஸ் கொடுப்பதற்காக புதிய ரோபோட் ஒன்றை செய்துள்ளது. இந்த ரோபோட் கூகுள் நிறுவனத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்... ஊழியர்களை எச்சரித்த கூகுள்! மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்... ஊழியர்களை எச்சரித்த கூகுள்!

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் தங்களது பணியாளர்களுக்கு ஓய்வு நேரத்தில் டீ, காபி, சோடா மற்றும் சிப்ஸ்களை எளிதாக பெறுவதற்கு ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence) தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபோட்டுக்களை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோட்கள் சிந்திக்கும் திறன் மற்றும் உரையாடல் திறன் உடையது என்றும் கண்கள் மற்றும் கைகளை கொண்டு இந்த ரோபோட்கள் மெக்கானிக்கல் வெயிட்டர்கள் போல செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் எந்த பொருள் கேட்டாலும் அந்த பொருளை உடனே எடுத்து ஊழியர்களுக்கு பரிமாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு அல்ல
 

விற்பனைக்கு அல்ல

ஆனால் அதே நேரத்தில் இந்த ரோபோஃப்க்களை விற்பனை செய்வதற்கு தயாராக இல்லை என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பரிமாறுவதற்கு மட்டுமே இந்த ரோபோட்டுக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், எனவே விற்பனை நோக்கத்துடன் இந்த ரோபோட்டுக்கள் உருவாக்கப்படவில்லை என்றும் கூகுள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இந்த ரோபோட்க்கள் மிகச் சிறந்த அறிவு மற்றும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த ரோபோட்க்கள் மிகச் சிறப்பாக பணிபுரியும் என்றும் கூறப்படுகிறது. விக்கிப்பீடியா மற்றும் சமூக ஊடகங்கள் அறிவுடன், உலகத்தை புரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்துடன் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பம்

இந்த ரோபோட்க்கள் இதற்கு முன் உருவாக்கப்பட்ட ரோபோட்களை விட முற்றிலும் வித்தியாசமானது என்றும் ஏஐ தொழில்நுட்பம் இணைக்கப்பட்டது மூலம் ரோபோட்க்கள் மனிதர்களின் கட்டளைகளை புரிந்து கொண்டு மிகச்சரியாக வேலை செய்கிறது என்றும் இதனை வடிவமைத்தவர்கள் கூறி உள்ளனர்.

கூகுள் ஊழியர்கள்

கூகுள் ஊழியர்கள்

எனவே இனி கூகுள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அங்கு உள்ள கேன்டீன் ஊழியர்களிடம் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்த ரோபோட்களிடம் கேட்டால் அடுத்த சில வினாடிகளில் அவர்கள் கேட்ட பொருள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Artificial Intelligence Giant Demos Soda-Fetching Robots in Google Office

Artificial Intelligence Giant Demos Soda-Fetching Robots in Google Office | டீ, காபி, சிப்ஸ் தரும் ரோபோட்... கூகுளின் அசத்தல் முயற்சி!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X