தப்பு கணக்கு போட்டுட்டோம்.. முதல்ல இவங்களுக்கு தான் வேலை போகும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேகமாக மாறி வரும் உலகில் டெக்னாலஜியின் உதவிகள் மூலம் ஒரு நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்தும், செயல்திறனை சுமார் 20 சதவீதம் அதிகரிக்க முடியும் எனப் பல தரப்பினர் கூறிவரும் காரணத்தால் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் டெக் சேவைகளைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

குறிப்பாகக் கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பின்பு உற்பத்தித் துறை முதல் சேவை துறை முதல் டெக் சேவைகளின் தேவையை உணர்ந்து இதற்காக அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.

இதேவேளையில் அதிகப்படியான டெக் சேவைகள், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறையும் என்ற பொதுவான கருத்து உள்ளது.

இந்தக் கருத்துக்கு மாறுபட்ட விளக்கமும், தெளிவும் கிடைத்துள்ளதாக மீஷோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 150 பேரை பணி நீக்கம் செய்த மீஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..! 150 பேரை பணி நீக்கம் செய்த மீஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..!

மீஷோ

மீஷோ

இந்தியாவின் மிகப்பெரிய ரீசெல்லர் சேவை தளமான மீஷோ நிறுவனத்தின் சிஇஓ விதித் ஆத்ரே உலகளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு மூலம் நாம் நினைக்கும் வேலைவாய்ப்புகளைக் காட்டிலும் இந்த வேலைவாய்ப்புகளை விழுங்கி விடும் என நினைக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

பொதுவாகச் செயற்கை நுண்ணறிவு மூலம் திரும்பத் திரும்பச் செய்யும் பணிகளையும், மெக்கானிக்கல் பணிகளைத் தான் முதலில் சந்தையில் நீக்கப்பட்டும் எனக் கணிக்கப்பட்டும் நிலையில் மீஷோ நிறுவனத்தின் சிஇஓ விதித் ஆத்ரே கிரியேட்டிவ் பணிகள் முதலில் நீக்கப்படும் என நினைக்கிறார்.

லின்கிடுஇன் பதிவு

லின்கிடுஇன் பதிவு

மீஷோ நிறுவனத்தின் சிஇஓ விதித் ஆத்ரே தனது லின்கிடுஇன் தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை, திரும்பத் திரும்பச் செய்யும் பணிகளைத் தான் முதலில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நீக்கப்படும் என அனைவரும் கருதினர். ஆனால் தற்போது Dall E, ChatGPT போன்றவற்றின் அறிமுகம் மூலம் coding, writing, painting போன்ற கிரியேடிவ் பணிகள் தான் முதலில் நீக்கப்பட்டு, இப்பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது என விதித் ஆத்ரே தெரிவித்துள்ளார்.

Dall E சேவை

Dall E சேவை

Dall E என்பது நாம் எழுதும் டெக்ஸ் மூலம் இமேஜ் உருவாக்குகிறது. Dall E உருவாக்கிய நிறுவனம் கூறுகையில் நேச்சுரல் லேங்வேஜ் மூலம் டெக்ஸ்ட் மூலம் இமேஜ் உருவாக்க நியூரல் நெட்வொர்க்-ஐ தயார் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. அதாவது நீங்கள் கருப்பு நிறத்தில் ஆப்பிள் வேண்டும் என எழுதினால் போதும் கருப்பு நிறத்தில் ஆப்பிள் புகைப்படத்தை Dall E உருவாக்கிவிடும்.

 ChatGPT சேவை

ChatGPT சேவை

இதேபோல் ChatGPT தளம் மனிதர்கள் பேசுவதைப் போலவே நாம் கேட்கும் கேள்விக்குப் பதிலையும், விளக்கத்தையும் அளிக்கும். இது வாய்ஸ் மூலம் இயங்குவது இல்லை, டெக்ஸ்ட் வாயிலாக இயங்கும் காரணத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் இது பயன்படும் என்றும், கம்பியூட்டர் கோடிங் முதல் மக்களின் அன்றான கேள்விக்கும் இது பதில் அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Artificial Intelligence may remove creative jobs before mechanical jobs says Meesho Vidit Aatrey

Artificial Intelligence is coming for creative jobs before mechanical jobs says Meesho Vidit Aatrey; Dall E, ChatGPT
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X