பாரத் பே நிறுவனத்தில் நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பல மோசடிகள் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரத்தில் பாரத்பே-வின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அழகு பராமரிப்பு, விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்க, வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவற்றிக்காக பல கோடி ரூபாய் நிறுவன பணத்தில் செலவு செலவு செய்துள்ளதாக குற்றச் சாட்டும் உள்ளது..
இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..!
ஒரு யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனத்தில் நிலவி வரும் தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், தோண்ட தோண்ட பெரும் ஊழல்கள் வெளியாகி வருகின்றன.

பதவி விலகிய அஷ்னீர்
மனைவி பணி நீக்கம் செய்யப்பட்ட சில தினங்களுக்கு முன்பு பாரத் பே நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஷ்னீவர் குரோவர், பதவி விலகுதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். கோடக் வங்கி ஊழியர் ஒருவரை அவதூறாக பேசியதாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குடும்பமே சேர்ந்து முறைகேடு
பாரத்பே நிறுவனம் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் கட்டுப்பாட்டாளர் மீது சுமத்தி வருகின்றது. இந்த நிலையில் குடும்பமாக இணைந்து, பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வெளி ஆலோசகர்கள் மூலம் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிக்கையில், எல்லா மோசடிகளும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆக அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க நிறுவனத்திற்கு உரிமை உண்டு எனவும் பாரத் பே தெரிவித்துள்ளது.

குரோவர் நிறுவனத்தில் இல்லை
குரோவரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதா? என்பது குறித்து நிறுவனம் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இனி அவர் ஒரு ஊழியர். அவர் நிறுவனத்தின் இயக்குனராக இல்லை என்று நிறுவனம் கூறியது. நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க வாரியம் ஒரு போதும் விரும்பவில்லை. இனி குரோவர் நிறுவனத்தின் பணியாளராகவோ அல்லது நிறுவனராகவோ அல்லது இயக்குனராகவோ இல்லை என்றும் பிசினஸ் டுடே அறிக்கை கூறுகிறது. எனினும் இது குறித்து குரோவர் தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.

ஆடம்பர செலவுகள்
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு மாதுரி ஜெயின் பாரத் பே நிறுவனத்தின் நிதியினை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் தணிக்கையில் தெரிய வந்தது. குறிப்பாக உயர்தர அழகு பராமரிப்பு, விலை உயர்ந்த மின்னனு சாதனங்கள், வெளி நாடு சுற்றுப் பயணத்திற்காக நிறுவனத்தின் பணத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. மேலும் கடந்த ஆண்டில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சொத்துகளை வாங்கியுள்ளதாக அஷ்னீவ மற்றும் மாதுரியிடம் பாரத்பே கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

துஷ்பிரயோகம்
விசாரணையின் முடிவு வாரியத்திடம் சமர்பிக்கப்படும் என்றும் அஷ்னீர் குரோவர் நோட்டீஸ் பெற்ற சில நிமிடங்களில், தனது ராஜினாமா குறித்து மெயிலினை அனுப்பியுள்ளார். எனினும் குரோவர் தரப்பில் இது ஆதரமற்ற குற்றச்சாட்டு என கூறப்படுகின்றது. மேலும் குரோவரின் குடும்பமே நிறுவனத்தின் நிதியினை தவறாக பயன்படுத்தியதோடு, போலி விற்பனையாளர்களை உருவாக்கி அதன் மூலம் மோசடி செய்துள்ளனர். மொத்தத்தில் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கினை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.