ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.3 லட்சம் லாபம்.. அசத்தல் லாபத்தில் அஸ்ட்ரல் பாலி டெக்னிக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐந்து வருடத்தில் 1 லட்சம் ரூபாயினை வங்கியில் டெபாசிட் செய்திருந்தால் கூட அதன் மதிப்பு 3 லட்சம் ரூபாயாக திரும்ப கிடைத்திருக்காதே? அப்படி என்ன முதலீடு?

 

நிச்சயம் தலைப்பினை பார்த்ததும் இந்த கேள்வி எழுந்திருக்கும். ஏனெனில் பொதுவாக நமக்கெல்லாம் முதலீடு என்ற உடனேயே முதலில் நியாபகத்தில் வருவது வங்கி டெபாசிட் தான்.

அதனை விஞ்சிய முதலீடு வேறு எதுவும் கிடையாது. அப்படியே விதிவிலக்காக பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களை பார்த்தாலும், அட எங்கப்பா எல்லாம் நஷ்டம் தான்? அது ஒரு சூதாட்டம் என்று தான் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

எந்த நிறுவனத்தில் முதலீடு?

எந்த நிறுவனத்தில் முதலீடு?

அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதே இந்த நிறுவனத்தின் முக்கிய பணியாகும். குறிப்பாக பைப்புகள், கூடுதல் பிட்டிங்க்ஸ், பிளிம்பிங் வேலைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வடிகால் அமைப்புகளுக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

பிளாஸ்டிக் சம்பந்தமான உற்பத்தி

பிளாஸ்டிக் சம்பந்தமான உற்பத்தி

அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதே இந்த நிறுவனத்தின் முக்கிய பணியாகும். குறிப்பாக பைப்புகள், கூடுதல் பிட்டிங்க்ஸ், பிளிம்பிங் வேலைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வடிகால் அமைப்புகளுக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

பைப்புகள் உற்பத்தி
 

பைப்புகள் உற்பத்தி

குறிப்பாக இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் துறைக்கு கூடுதல் மைலேஜ் கொடுக்கும் விதமாக இந்த நிறுவனத்தின் பொருட்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் துணை நிறுவனமான அஸ்ட்ரல் பைப்ஸ் ஒரு உண்மையான உலகளாவிய உயர் செயல்திறன் கொண்ட நிறுவனமாக உள்ளது. அஸ்ட்ரல் பைப்புகள் துறையில் புதுமையை கொண்டு வருகிறது.

மூன்று மடங்கு அதிகரித்த பங்கு விலை

மூன்று மடங்கு அதிகரித்த பங்கு விலை

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் முதலீட்டாளர்களுக்கு, வலுவான வருவாயினை வழங்கியுள்ளது. அதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 27% அதிகரித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் பங்கின் விலையானது 2015 ஜூலை முதல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்த கட்டுரையானது பிசினஸ் ஸ்டேண்டர்டில் வெளியான கட்டுரையை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அன்று என்ன விலை?

அன்று என்ன விலை?

கடந்த ஜூலை 15, 2015 அன்று அன்று இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய். ஜூலை 15 அன்று இதன் பங்கு விலையானது 304 ரூபாயாக இருந்த நிலையில், இது ஜூலை 15, 2020 நிலவரப்படி இதன் விலையானது 927 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே தற்போது அதன் விலையானது 945 ரூபாயாகும்.

இவ்வளவு சரிவா?

இவ்வளவு சரிவா?

அஸ்ட்ரல் பாலி டெக்னிக் பங்கின் விலையானது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12% குறைந்துள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 21.87% வீழ்ச்சி கண்டுள்ளது. மிட் கேப் பங்கான இது 50 நாள் மூவிங்க் ஆவரேஜ்-க்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது. எனினும் 5 நாள், 20 நாள், 100 நாள், 200 மூவிங் ஆவரேஜ் கீழும் உள்ளது.

சகாக்களின் பங்குகள்?

சகாக்களின் பங்குகள்?

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் சகாக்கள் சற்று பின் தங்கியுள்ளனர். பினோலெக்ஸ் பங்கு 67% உயர்ந்துள்ளது. இதே ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ்ஸின் பங்கு விலையானது 86% வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் கிரிதி இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது 148% உயர்ந்துள்ளது.

நிகரலாபம்

நிகரலாபம்

இதற்கிடையில் கடந்த ஜூன் மாதத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகம், அடுத்த 5 ஆண்டுகளில் இரு இலக்க வளர்ச்சி காணுவோம் என்று தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் நிகரலாபம் 26.61% அதிகரித்து, 247.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 195.80 கோடி ரூபாய் நிகரலாபம் பார்த்திருந்தது கவனிக்கதக்கது.

கடன் விகிதம் குறைவு

கடன் விகிதம் குறைவு

எனினும் இந்த நிறுவனத்தின் சாதகமான விஷயம் என்னவெனில் கடன் பெரியளவில் கிடையாது என்பது தான். கடந்த 2020ம் நிதியாண்டில் கடன் மற்றும் ஈக்விட்டி ரேசியோ 0.08 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 2015ம் நிதியாண்டில் 0.22 ஆக இருந்துள்ளது. இதுவே இந்த நிறுவனத்திற்கு முதல் சாதகமான விஷயமாகவும் அமைந்துள்ளது.

உற்பத்தி மற்றும் விற்பனை எங்கெங்கு?

உற்பத்தி மற்றும் விற்பனை எங்கெங்கு?

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பிளம்பிங், தொழில்துறை, வடிகால், தீ, விவசாயம், பாதுகாப்பு, மின் வழித்தடம், கட்டுமானம், பராமரிப்பு, மர பராமரிப்பு மற்றும் வாகனகளுக்கான பிசின் வகைகள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் உற்பத்தி செய்து வருகிறது. அதோடு உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலும் விற்பனையும் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Astral poly technik share turned Rs.1 lakh to Rs.3 lakh in just 5 years

Share investment.. Astral poly technik share turned Rs.1 lakh to Rs.3 lakh in just 5 years
Story first published: Thursday, July 16, 2020, 17:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X