ஏடிஎம் சேவைக்குக் கூடுதல் கட்டணம்.. சாமானிய மக்களுக்குப் பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அதிகமாக இருந்தாலும், சமானிய மக்கள் அதிகம் பணத்தின் வாயிலாகத் தான் அனைத்து வர்த்தகத்தையும் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மெட்ரோ நகரங்களை விடுத்து மற்ற அனைத்து இடங்களிலும் 90 சதவீதம் வர்த்தகம் பணத்தின் மூலமாகத் தான் நடைபெற்று வருகிறது.

இப்படியிருக்கும் போதும் மக்களின் தினசரி தேவைக்கான பணத்தைப் பெறுவதற்கு ஏடிஎம் ஒன்று தான் பிரதான வழியாக உள்ளது. மக்கள் தங்களின் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் எடுக்க ஏற்கனவே கட்டணம் செலுத்தி வரும் நிலையில் தற்போது இக்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஏடிஎம் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன்
 

ஏடிஎம் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன்

இந்திய ஏடிஎம் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பு மக்களின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவில் ஏடிஎம் வர்த்தகம் தற்போது அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்து வரும் நிலையில், கூடுதல் வருமானம் இல்லையெனில் இந்தியாவில் முழுவதும் ஏடிஎம் அமைக்கும் திட்டத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஏடிஎம் இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் இதர அடிப்படை சேவை தரத்தை உயர்ந்தியது. இதனால் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை நிர்வகிக்கும் செலவும் அதிகளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதைச் சமாளிக்கும் பொருட்டுக் கூடுதல் வருமானத்தைப் பெற வேண்டும் என நோக்கில் ஏடிஎம் சேவை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என இந்திய ஏடிஎம் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கியிடும் கோரிக்கை விடுத்துள்ளது.

 கட்டணம்

கட்டணம்

தற்போது ஏடிஎம் சேவைக்காக மக்களிடம் வசூலிக்கப்படும் interchange fee என்பது 15 ரூபாயாக உள்ளது. இதில் ஒரு வாடிக்கையாளர்களுக்கு 5 இலவச பணப் பரிமாற்றங்களும் அடக்கம், இக்கட்டணத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது. ஆனால் இந்தத் தொகை போது என ரிசர்வ் வங்கியிடம் ஏடிஎம் இந்திய ஏடிஎம் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏடிஎம் சேவை
 

ஏடிஎம் சேவை

2019ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு, ஏடிஎம் சேவையை நாட்டின் சின்னச் சின்னக் கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு மக்களை ஏடிஎம் சேவையைப் பயன்படுத்த ஏதுவாகச் சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க முயற்சி செய்து வருகிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

அரசின் இலக்கை அடைய வேண்டுமெனில் ஏடிஎம் சேவையின் விரிவாக்கம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி என்ன முடிவெடுக்கப்போகிறது..? இந்திய ஏடிஎம் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் கோரிக்கைக்கு அடுத்தச் சில நாடுகளில் ரிடர்வ் வங்கி முடிவை சொல்லும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ATM operators seek higher fees on withdrawals

India’s ATM operators’ association has written to the Reserve Bank of India (RBI) seeking a hike in the interchange fee paid by customers on cash withdrawals, saying their businesses will “bleed.” This could significantly impact the rollout of new ATMs in a country already battling low teller machine penetration.
Story first published: Monday, February 17, 2020, 8:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more