பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும், இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தூண்டுதல் தொகுப்பு தொடர்பான சில புதிய நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றி பேசியவர், அக்டோபரில் எரிசக்தி நுகர்வு ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், வங்கி கடன் வளர்ச்சி 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் பங்குச் சந்தைகள் சாதனை அளவில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு சாதனை உச்சத்தினை எட்டியுள்ளதாகவும், அன்னிய முதலீடுகள் வரத்தும் அதிகரித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.
நகரவாசிகளுக்கு ஜாக்பாட்.. சொந்த வீடு வாங்க ரெடியா இருங்க..!

சந்தை செவிமடுக்கவில்லை
மேலும் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலைக்கு திரும்பலாம் என்றும் கூறியிருந்தார். இப்படி சந்தைக்கு சாதகமான பல செய்திகளை கூறியிருந்தார். ஆனால் இவற்றிற்கு சந்தை செவிமடுக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்திய சந்தைகள் இன்று காலையில் சரிவில் தொடங்கிய நிலையில், முடிவிலும் சரிவில் முடிவடைந்துள்ளது.

சரிவில் இந்திய சந்தைகள்
மும்பை பங்கு சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 236 புள்ளிகள் குறைந்து, 43,357 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து, 12,690 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.65 ரூபாயாக சரிவடைந்துள்ளது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.5% மற்றும் 1.3% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், ஹெச் யு எல், ஹிண்டால்கோ, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே எஸ்பிஐ, கோல் இந்தியா, கோடக் மகேந்திரா, இந்தஸ்இந்த் வங்கி, எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச் யு எல், ஐடிசி, லார்சன், பஜாஜ் பின்செர்வ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, இந்தஸ்இந்த் வங்கி, எண்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளன.