உலகளாவிய பிட்காயின் வர்த்தகத் தளமான பிட்பாண்டா 250 ஊழியர்களைக் கிரிப்டோ கரன்சி விலை தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் பணிநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவின் பிரபலமான பில்லியனர் தொழிலதிபர் Peter Thiel முதலீட்டில் இயங்கி வரும் Bitpanda அதன் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களில் இருந்து 730 ஆகக் குறைப்பதாக அறிவித்தது.
கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. தரையை தட்டும் பிட்காயின்..!

4.1 பில்லியன் டாலர்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலீட்டு திரட்டல் முயற்சியின் போது 4.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மதிப்பிடப்பட்டது.இந்நிலையில் 250 ஊழியர்கள் பணிநீக்கம் மட்டும் அல்லாமல் சமீபத்தில் வழங்கிய பணிநியமன ஆணைகளையும் நீக்கியுள்ளது.

பிட்பாண்டா
"எங்கள் நிறுவனத்தின் ஒரு பகுதியை நாங்கள் வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் சுமார் 730 நபர்களை இலக்காகக் கொண்ட நிறுவனமாக மாறியுள்ளோம்" என்று பிட்பாண்டா நிறுவனம் வெள்ளிக்கிழமை தனது நிறுவனத்தின் பிளாக் போஸ்ட்-ல் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியா
ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட பிட்பாண்டா மில்லியன் கணக்கான சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஐரோப்பாவின் பரந்த அளவிலான டிஜிட்டல் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான சேவையும் தளத்தையும் உருவாக்கியுள்ளது.

காயின்பேஸ்
உலகின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சேவை நிறுவனமான காயின்பேஸ் சிஇஓ தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தப் பொருளாதார வீழ்ச்சியின் போது நிறுவனம் நிதியியல் அடிப்படையில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, 18 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

BlockFi பணிநீக்கம்
இதேபோல் மற்றொரு கிரிப்டோகரன்சி நிறுவனமான BlockFi திங்கட்கிழமை கடினமான சந்தை நிலைமைகளுக்கு மத்தியில் மூலோபாய மதிப்பாய்வு செய்யும் பொருட்டு மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்தப் பணிநீக்கம் BlockFi நிறுவனத்தில் அனைத்து துறையிலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோ முதலீட்டாளர்களே உஷார்.. ஜூலை 1 முதல் புதிய வரி..!