ஆட்டோமொபைல் துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. இன்னும் எத்தனை பேரின் வேலையை காலி செய்யப் போகுதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நடப்பு ஆண்டில் ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் லட்சம் பேருக்கு மேல் தங்களது வேலையை இழந்தும் தவித்து வருகின்றனர்.

 

இப்படியொரு நிலையில் மீண்டும் இந்த வீழ்ச்சி தொடர்ந்தால், இன்னும் எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் மூடீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ம் ஆண்டிலும் ஆட்டோமொபைல் துறை மீண்டும் சரிவைக் காணும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறை அவுட்லுக்

ஆட்டோமொபைல் துறை அவுட்லுக்

உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரி பாகங்கள் சப்ளையர்களுக்கான அதன் பார்வை எதிர்மறையாக உள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரிபாகங்கள் சப்ளையர்கள் குளோபல் அவுட்லுக் அதன் ஆராய்ச்சி அறிக்கையில் (Automotive manufacturers and parts suppliers - Global 2020 Outlook) 2020ம் ஆண்டு இன்னும் வீழ்ச்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் உலகளாவிய இலகுரக வாகன விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கார் விற்பனை சரியும்

கார் விற்பனை சரியும்

உலகளாவிய கார் விற்பனையானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சரியும் என்றும் மூடிஸ் எதிர்பார்க்கிறது. மூடிஸ் கூற்றுப்படி முக்கிய சந்தைகளில் பொருளாதார வளர்ச்சி பலவீனமடைந்து வருகிறது. இலகுவான வாகனங்களுக்கான உலகளாவிய தேவை மந்தமாகவே இருக்கும். மேலும் பொருளாதார வீழ்ச்சியால் கார் விற்பனையும் குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

காரணம் என்ன?
 

காரணம் என்ன?

மூடியின் அறிக்கையின் படி, அரசியல் அபாயங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் இத்துறையை எடைபோடும் என்றும் மூடிஸ் கருதுகின்றது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய வாகன சந்தையான சீனா 1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மேற்கு ஐரோப்பிய கார் விற்பனையில் சுருக்கம் அதிகரிக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக வளர்ச்சியை மிதமான வளர்ச்சியையே ஜப்பான் பதிவு செய்யும் என்றும் கணித்துள்ளது.

அமெரிக்காவிலும் இதே நிலைதான்?

அமெரிக்காவிலும் இதே நிலைதான்?

அமெரிக்கா இலகுரக வாகன விற்பனையானது 2019ம் ஆண்டில் 2.9 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே 2020ம் ஆண்டில் 0.6 சதவிகிதம் சரியும் என்றும் கருதப்படுகிறது. குறைந்த ஊக்குவிப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் இருந்து அதிகரித்த போட்டி ஆகியவை மிதமான தேவைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இலகுரக வாகன விற்பனை சரியும்

இலகுரக வாகன விற்பனை சரியும்

இந்த நிலையில் மேற்கு ஐரோப்பிய சந்தைகளை பொறுத்தவரை 2020ம் ஆண்டில் இலகுரக வாகன விற்பனையானது மூன்று சதவிகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பலவீனமான பொருளாதார சூழலால், தேவை தடைபட்டுள்ளது. அதிலும் இங்கிலாந்தில் நிச்சயமற்ற தன்மையே உள்ளது.இதனால் வாகன விற்பனை குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பணி நீக்கம்

பணி நீக்கம்

ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக பல ஆயிரம் பேர் உலகம் முழுவதிலும், தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டிலும் இதே நிலை நீடித்தால் இன்னும் எத்துனை ஆயிரம் பேர் தங்களது பணியினை இழப்பார்கள் என்று தெரியவில்லை. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: moodys மூடிஸ்
English summary

Auto mobile crisis: Moody’s investors said outlook for global auto makers in negative

Moody’s investors said outlook for global automotive manufactures and parts suppliers are negative in 2020. Also moodys said continued to decline in global light vehicle sales and the global car sales to decline for third year.
Story first published: Tuesday, December 17, 2019, 10:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X