கார் விற்பனை அமோகம்.. மாருதி முதல் ஹூண்டாய் வரை கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பால் இந்திய ஆட்டோமொபைல் சந்தை உற்பத்தி முதல் விற்பனை வரை முற்றிலும் முடங்கிய நிலையில், சில மாதங்களுக்கு முன் உற்பத்தி துவங்கப்பட்டது.

இந்நிலையில் பண்டிகை கால விற்பனை சலுகையாக அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய கார்களை அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலான ஆஃபர், தள்ளுபடி என வாரி வழங்கியது.

இதன் எதிரொலியாக எப்போதும் இல்லாத வகையில் அக்டோபர் மாதத்தில் கார்களின் விற்பனை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் ஹூண்டாய் நிறுவனம் வரலாறு காணாத விற்பனையை இந்த மாதம் பதிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மாருதி சுசூகி நிறுவனம் விற்பனையில் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ரூ.1.63 லட்சம் கோடி அவுட்.. லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் பர்ஸ்ட்..!ரூ.1.63 லட்சம் கோடி அவுட்.. லிஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் பர்ஸ்ட்..!

பண்டிகை காலம்

பண்டிகை காலம்

இந்திய வர்த்தகச் சந்தையில் மிகவும் முக்கியக் காலமாகப் பார்க்கப்பட்டும் இந்த நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை கால விற்பனைக்குத் தயாராக வேண்டும் எனத் திட்டமிட்டு சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது உற்பத்தியை அதிகரித்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வாகனங்களை முன்கூட்டியே ஸ்டாக் செய்துள்ளது.

குறிப்பாகச் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து சிறிய ரகக் கார்களும், பைக்குகளும் அதிகளவில் விற்பனைக்காக ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது.

 

தள்ளுபடி விற்பனை

தள்ளுபடி விற்பனை

நகரங்களில் புதிய கார்களின் அறிமுகத்தின் மூலம் வாடிக்கையாளர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இதனுடன் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த 6 மாதத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகளை ஈடுசெய்ய அதிகளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

அக்டோபர் 2020ல் மட்டும் மாருதி சுசூகி சுமார் 1.82 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது அசத்தியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டுச் சுமார் 19 சதவீதம் அதிக கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி.

இக்காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 9,586ஆக உயர்ந்து சுமார் 4.7 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகளான காம்பேக்ட் கார் பிரிவில் WagonR, Swift, Celerio, Ignis, Baleno மற்றும் Dzire ஆகியவற்றின் மொத்த விற்பனை 26.6 சதவீதம் அதிகரித்து 95,067 கார்களை விற்பனை செய்துள்ளது. எஸ்யூவி மற்றும் எம்யூவி பிரிவில் இருக்கும் Ertiga மற்றும் Brezza ஆகிய கார்களின் விற்பனை 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் வர்த்தக வாகன பிரிவில் 30.5 சதவீதமும், வேன் பிரிவில் 32.9 சதவீத வளர்ச்சியும் மாருதி சுசூகி பதிவு செய்துள்ளது.

 

ஹூண்டாய்

ஹூண்டாய்

நாட்டின் முன்னணி கார் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 56,605 கார்கை விற்பனை செய்து ஒரு மாத விற்பனை அளவீட்டில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இக்காலகட்டத்தில் உள்நாட்டு விற்பனை 13.2 சதவீதம் அதிகரித்து 56,605 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதேபோல் 12,230 கார்களை ஏற்றுமதி செய்து 10.1 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

 

எம்ஜி மோட்டார்

எம்ஜி மோட்டார்

இந்தியாவில் புதிதாகக் களமிறங்கிய எம்ஜி மோட்டார் அக்டோபர் மாத விற்பனையில் 6% மாதாந்திர உயர்வைப் பதிவு செய்து, சுமார் 3,750 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிரபலமான எம்ஜி ஹெக்டார் கார்களை இம்மாதத்தில் சுமார் 3,625 கார்களை விற்பனை செய்துள்ளது. இதேபோல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட MG SZ எலக்ட்ரிக் காரில் 125 காரை விற்பனை செய்துள்ளது.

மேலும் எம்ஜி கோல்ஸ்டர் காருக்கு சுமார் 2,000 கார்களுக்குப் புக்கிங் பெறப்பட்டுள்ளது எம்ஜி மோட்டார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Auto Sales rocketed in October due to festive season sales

Auto Sales rocketed in October due to festive season sales
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X