ஆட்டோமேடிக் ரெக்கரிங் பேமெண்ட் முறை ஏப்ரல் 1 முதல் ரத்து.. ரிசர்வ் வங்கி உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பலருக்கும் பெரிய உதவிகரமாக இருக்கும், சிலருக்குச் சுமையாக இருக்கும் ஆட்டோமேட்டிக் ரெக்கிரிங் பேமெண்ட் முறையைச் சில முக்கியமான சேவைகளுக்கு ரத்துச் செய்ய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மொபைல் ரீசார்ஜ், யூடிட்டி பில் அதாவது மின்சாரக் கட்டணம், இண்டர்நெட் கட்டணம் ஆகியவற்றுக்கு ஆட்டோமேட்டிக் பேமெண்ட் சேவை ஏப்ரல் 1 முதல் அளிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி Additional Factor of Authentication (AFA) வாயிலாக அறிவித்துள்ளது.

 டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள்

டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள்

டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் மக்களின் வாழ்க்கை முறையை மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. ஆனால் பல சேவைகள் சாமானிய மக்களுக்குச் சுமையாக மாறியுள்ளது என்பதை உணர்ந்த ரிசர்வ் வங்கி Additional Factor of Authentication (AFA) வாயிலாக ஆட்டோமேட்டிக் பேமெண்ட் முறைக்குத் தடை வித்துள்ளது.

 அவகாசம் வேண்டும்

அவகாசம் வேண்டும்

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வங்கி மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள் கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், எவ்விதமான மறு அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை, ஆனால் ஏப்ரல் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ஆட்டோமேட்டிக் பேமெண்ட் சேவைகள் இருக்காது.

 ரிசர்வ் வங்கி உத்தரவு

ரிசர்வ் வங்கி உத்தரவு

டிசம்பர் 4ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, பீரிபெய்டு பேண்மெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் அல்லது யூபிஐ வாயிலாக ஆட்டோமேட்டிக் ரெக்கரிங் பேமெண்ட் சேவை அளிக்கும் வர்த்தக வங்கிகள், RRB, என்பிஎப்சி, பேமெண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு AFA உத்தரவின் படி மார்ச் 31க்குப் பின் இந்தச் சேவைகளை அளிக்கக் கூடாது என அறிவித்துள்ளது.

 பாதுகாப்பு மற்றும் ஆபத்து

பாதுகாப்பு மற்றும் ஆபத்து

ரிசர்வ் வங்கி இந்தப் பேமெண்ட் முறையில் இருக்கும் ஆபத்து காரணிகளை உணர்ந்து, அதைத் தடுக்கும் விதமாகவும், பேமெண்ட் முறையில் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்தக் கடுமையான மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

 ரெக்கரிங் பேமெண்ட் சேவை

ரெக்கரிங் பேமெண்ட் சேவை

இதன் மூலம் யூடிலிட்டி பில், போன் ரீசார்ஜ், டிடிஹெச் ரீசார்ஜ் மற்றும் OTT ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு ரெக்கரிங் பேமெண்ட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளது.

 5000 ரூபாய் வரையில் அதிகரிப்பு

5000 ரூபாய் வரையில் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2021ல் டிஜிட்டல் பேமெண்ட் சேவை ஆதரிக்கும் விதமாக contactless card பேமெண்ட்-க்கான பேமெண்ட் அளவீட்டை 2,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதேவேளையில் ரெக்கரிங் பணப்பரிமாற்றத்திற்கு e-mandates கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 வாடிக்கையாளர்களிடம் கட்டுப்பாடு

வாடிக்கையாளர்களிடம் கட்டுப்பாடு

இதன் மூலம் ஒவ்வொரு ரெக்கரிங் பணப்பரிமாற்றத்திற்கும் வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே பேமெண்ட் நாள் குறித்துத் தெரிவிக்க வேண்டும், ஒப்புதல் பெற வேண்டும். இதன் மூலம் பேமெண்ட் அனைத்தும் வாடிக்கையாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் 5,000 ரூபாய்க்கு அதிகமான பேமெண்ட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து OTP பெறப்பட்ட பின்னரே பேமெண்ட் செய்ய முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Automatic recurring payment will be stop from April 1: RBI announcement comes into action

Automatic recurring payment will be stop from April 1: RBI announcement comes into action
Story first published: Wednesday, March 31, 2021, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X