80,000 பேருக்கு வேலை பறிபோகலாம்.. கதறும் ஆட்டோமொபைல் துறையினர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு ஆட்டோமொபைல் துறையினருக்கு கெட்ட காலமே. ஏனெனில் எப்போது வேலை பறிபோகுமோ? வேலை இருக்குமா இருக்காதா? என்ற பயத்திலேயே இருந்து வருகின்றனர்.

கடந்த பல மாதங்களிலேயே பல ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ள நிலையில், வரும் ஆண்டில் 80,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வேலையை இழக்க நேரிடலாம் என்றும் ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டிலேயே மிக மோசமான நிலையை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறையினர், அடுத்த ஆண்டிலும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நினைக்கும் போதே, இது சற்று கவலையளிக்கிறது.

ரூ.150-ஐ தொட்ட வெங்காயத்தின் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ..!ரூ.150-ஐ தொட்ட வெங்காயத்தின் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ..!

தொடரும் பணி நீக்கம்

தொடரும் பணி நீக்கம்

விட்ட குறை தொட்டகுறையாக ஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையானது, அடுத்த ஆண்டிலும் தொடரும் என்றும், இதனால் 80,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை பறிபோகலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த வாரத்தில் டைம்லர் ஏஜி மற்றும் ஆடி கார் நிறுவனம் கிட்டதட்ட 20,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இது ஆட்டோமொபைல் துறையினரை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

யார் இந்த அறிக்கையை வெளியிட்டது?

யார் இந்த அறிக்கையை வெளியிட்டது?

ப்ளூம்பெர்க் நியூஸ் தொகுத்த தரவுகளின் படி, கார் தயாரிப்பாளர்கள் வரும் ஆண்டுகளில் 80,000 பேரை வேலையை விட்டு நீக்கலாம். இந்த பணி நீக்கமானது ஜெர்மனியில் குறிப்பிட்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையினர் அங்கு வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். இதனால் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அதன் ஒரு பகுதியே இந்த பணி நீக்கம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக பதற்றங்கள், ,மற்றும் அதிகரிக்கும் கட்டண செலவுகள், மூலதன செலவுகள், மூலதன உட்புகுத்தல், செலவினைக் கட்டுப்படுத்துதல், வாகனங்கள் மின்மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் செலவினை கட்டுப்படுத்த ஊழியர்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன உற்பத்தி நிறுவனங்கள். இதனால் பல ஆயிரம் பேர் உலகம் முழுவதும் தங்களது வேலையை இழக்கும் அபாயம் உள்ளது.

உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

உலக அளவில் வாகனத் உற்பத்தியாளர்கள் 88.8 மில்லியன் கார்கள் மற்றும் இலகுரக டிரக்குகளை உற்பத்தி செய்யும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட கிட்டதட்ட 6 சதவிகிதம் குறைவு என்றும் ஐ.ஹெச்.எஸ் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. அதிகளவிலான தொழில் துறையை உற்பத்தியை கைவசம் வைத்திருக்கும், சீனாவிலும் பணி நீக்கம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவிலும் இதே பிரச்சனை தான்

சீனாவிலும் இதே பிரச்சனை தான்

அதிகளவிலான பணியாளர்களை கொண்டிருக்கும் சீனாவிலும் இதே நிலை தான். விற்பனை சரிவில் உள்ள நிலையில், ஸ்டார்டப் நிறுவனமான Electric-vehicle startup NIO Inc., நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ளது. இது நியூயார்க்கில் பட்டியலிடப்பட்ட பங்குகள் வீழ்ச்சியடைவதைக் கண்டது. இந்த நிலையிலேயே செப்டம்பர் இறுதிக்குள் அதன் பணியாளர்களில் 20 சதவிகிதம் பேரை, கிட்டதட்ட 2000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்துள்ளது. ஏற்கனவே உலகளாவிய மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், அதிகளவிலான செலவினங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன என்று ப்ளும்பெர்க் புலனாய்வு ஆய்வாளர் கில்லியன் டேவிஸ் கூறியுள்ளார்.

ஜப்பானில் இதே நிலை தான்

ஜப்பானில் இதே நிலை தான்

ஜப்பானில் வாகன உற்பத்தியாளர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் 12,500 பதவிகளைக் குறைக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளில் செலவினை குறைக்க வயதான ஆட்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பென்ஸ் கார், ஆடி கார், உள்ளிட்ட பல சொகுசு கார் நிறுவனங்கள் எலக்ட்ரானிக் கார் உற்பத்தியை நோக்கி நகர்வதால் லாபத்தை அதிகரிக்கவும், செலவினை குறைக்கவும் இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆடி கார் நிறுவனம்

ஆடி கார் நிறுவனம்

வரும் 2025ல் ஜெர்மனியில் 9,500 பணிகளை நீக்க ஆடி கார் முன்னரே அறிவித்தது. இதன் பெற்றோர் நிறுவனமான வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு விலையுயர்ந்த மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. இதே டைம்லர் நிறுவனம் 10,000க்கும் மேற்பட்டோரை உலகளவில் பணி நீக்கம் செய்யவும் தயாராகி வருகிறது. அதிலும் ஜெர்மனியில் மட்டும் சுமார் 1,50,000 வேலைகள் ஆபத்தில் உள்ளதாகவும் சில அறிக்கைகள் கூறுகின்றன.

மறுசீரமைப்பில் ஆரம்பித்த பிரச்சனை

மறுசீரமைப்பில் ஆரம்பித்த பிரச்சனை

கார் தயாரிப்பாளரான ஃபோர்டு கடந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் அளவிலான மறுசீரமைப்பு திட்டங்களை வெளிப்படுத்தியபோதே, அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ய ஆரம்பித்து விட்டது. அது தொடர்ச்சியாக தற்போது வரை பணி நீக்கத்திற்கான அறிவிப்புகளை செய்து வருகிறது. அதன் உலகளாவிய சம்பள தரவுகளில் சுமார் 10 சதவிகிதம் குறைத்து, ஆறு ஆலைகளை மூட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ரஷ்யாவில் மூன்றும், அமெரிக்கா, யுகே மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் என்ன நடக்கிறது?

இந்தியாவில் என்ன நடக்கிறது?

இதில் சந்தோஷமான விஷயம் என்னவெனில், இந்திய நிறுவனங்கள் இதுபோன்ற எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. இந்தியாவிலும் வேலை இழப்புகள் இருக்கும் என்றாலும், உலகளவில் இருக்கும் அளவுக்கு மோசமாக இருக்குமா? ஏனெனில் இந்திய அரசு உற்பத்தி நிறுவனங்களுக்கென சில சலுகைகளை அளித்துள்ளது. இது தவிர ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் பி.எஸ் 6 விதிகளுக்கு பின்பு இத்துறை சீரடைய துவங்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் வேலை வாய்ப்புகளும் அதன் பின் அதிகரிக்க தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Automobile sector crisis: Car makers are lay off over 80,000 jobs during the coming years

Car makers are may lay off over 80,000 jobs in coming years to worldwide. its one of the worst years ever for auto workers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X