ஆக்ஸிஸ் வங்கி கொடுத்துள்ள சூப்பர் சான்ஸ்.. சுமார் 1000 பேரை பணியமர்த்த திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்ஸிஸ் வங்கி சுமார் 1,000 பேரினை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து வெளியான செய்தியொன்றில், Gig-a-Opportunities என்ற பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது திறமையான மற்றும் திறமைசாலிகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது. வாருங்கள் இதனை பற்றி பார்க்கலாம்.

கிக் வேலை

கிக் வேலை

ஆக்ஸிஸ் வங்கியின் இந்த பணியமர்த்தலானது இரண்டு முறைகளை உள்ளடக்கியது. முதலாவது முழு நேர நிரந்தர வேலை மற்றும் இரண்டாவது திட்டத்தின் கீழ் நேரத்தினை அடிப்படையாகக் கொண்டது. இதில் கிக் எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதார கீழ் இருக்கும் ஊழியர்கள், இதனை திறம்பட சாதாரண வேலைகளை போலவே செய்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

 கிக் ஊழியர்களை பணியமர்த்த திட்டம்

கிக் ஊழியர்களை பணியமர்த்த திட்டம்

ஆக அடுத்த வருடத்தில் நாங்கள் 800 முதல் 1000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் தஹியா பிடிஐக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால், நிறுவனத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் இப்போது அப்படி இல்லை. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இங்கு பல விஷயங்கள் மாறியுள்ளன.

திறமையான பணி
 

திறமையான பணி

ஆரம்பத்தில் மக்கள் வீட்டில் இருந்து பணிபுரிய தயங்கினர் என்று கூறிய தஹியா, ஆனால் அவர்கள் இப்போது அதனை பழக்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது உற்பத்தியை பெருக்க வழிவகுத்துள்ளது. அதோடு மக்கள் திறமையாக தங்களது வேலையினை செய்கின்றனர் எனவும் இது நிருபிக்கிறது எனவும் தஹியா கூறியுள்ளார்.

யார் யாருக்கு வாய்ப்பு?

யார் யாருக்கு வாய்ப்பு?

ஆக வங்கி நல்ல திறமையுள்ள, இளைஞர்கள். அனுபவம் வாய்ந்த மிட் லெவல் பணியாளர்கள், பெண்கள் நாடு முழுவதும் ஆக்ஸிஸ் வங்கி எதிர்பார்க்கிறது. பொதுவாக இந்த கிக் வாய்ப்புகள் முழு நேர வேலைகளைக் கொண்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட வேலைகளை ஒரு நிலையான காலத்துடன் 8 மாதங்கள் அல்லது ஒரு வருடத்துடனும் முடிக்க முடியும்.

தரம் முக்கியம்

தரம் முக்கியம்

எங்கள் வலைதளத்தில் இந்த முயற்சியின் கீழ் நாங்கள் பல பாத்திரங்களை முன் வைத்துள்ளோம். ஆக ஒவ்வொரு கிளைக்கும் பலரை அழைத்து செல்வோம். இந்த வாய்ப்புகளை திறந்த 3 -4 நாட்களில் இந்தியா முழுவதிலும் இருந்து 3000 சிவிக்கள் கிடைத்துள்ளன. நாங்கள் தரத்தில் சமரசம் செய்ய விரும்ப வில்லை. ஆகவே நாங்கள் காம்பன்சேசனிலும் சமரசம் செய்ய மாட்டோம் எனவும் தஹியா கூறியுள்ளார்.

முதல் பேட்ச் எப்போது?

முதல் பேட்ச் எப்போது?

ஆக அக்டோபர் 1 அல்லது 2ம் தேதி முதல் இந்த கிக் அடிப்படையில் முதல் பேட்ச் சேர்க்கப்படும். எனவே இது தொடர்ந்துன் நடந்து கொண்டிருக்கும். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை கருத்தில் கோண்டு இன்று வங்கிகள் வெகுவாக மாறிவிட்டது. இந்த வேலைக்காக விண்ணப்பிக்க வங்கி பின்னணியில் யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தஹியா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Axis bank plans to hire nearly 1000 people

New hiring.. Axis bank plans to hire nearly 1000 people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X