அரசின் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இணைவது.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏழை எளியமக்களுக்கான அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏழை குடும்பங்களுக்கும் நல்ல தரமான சுகாதார வசதியினை மலிவாக விலையில் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட அரசின் சூப்பரான திட்டமே இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா.

இந்த திட்டமானது சுமார் 1,350 வகையான சிகிச்சைகளுக்கு இந்த நிதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதுவும் நாட்டில் எங்கு வேண்டுமாலும் சென்று பயன் பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் ஏழை மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சைகள், வசதிகள் கிடைக்கும். மிகப் பெரிய மருத்துவமனைகளில், தீவிர உடல்நலக்குறைபாட்டுக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவின் மருத்துவ உபகரணங்கள் & மெட்டல் காஸ்டிங் ஃபோர்ஜிங் கம்பெனி பங்குகள் விவரம்! இந்தியாவின் மருத்துவ உபகரணங்கள் & மெட்டல் காஸ்டிங் ஃபோர்ஜிங் கம்பெனி பங்குகள் விவரம்!

PMJAY திட்டத்தில் வயது வரம்பு கிடையாது?

PMJAY திட்டத்தில் வயது வரம்பு கிடையாது?

இந்த PMJAY திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டினை வழங்குகிறது. அதோடு இந்த திட்டமானது குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என அனைவரையும் உள்ளடக்கியுள்ளது. எல்லாவற்றையும் விட இந்த திட்டத்தில் வயது வரம்பு என்பது கிடையாது. அதோடு குடும்ப உறுப்பினர் என்ற வரம்பும் கிடையாது.

எங்கெங்கு சிகிச்சை?

எங்கெங்கு சிகிச்சை?

இந்த திட்டத்தின் மூலம் தேவை ஏற்படின் அனைத்துப் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். மருத்துவ சிகிச்சைக்களுக்காக மருத்துவமனைகள் பயனாளியிடமிருந்து எந்தவொரு கூடுதலான தொகையையும் வசூலிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் இந்தியா முழுவதும் சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.

எவ்வளவு க்ளைம் செய்ய முடியும்?
 

எவ்வளவு க்ளைம் செய்ய முடியும்?

இந்த திட்டம் குறித்த தகல்வகள், உதவிகள், புகார்கள் மற்றும் குறைகளுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 14555 (அ) 1800 111 565 என்ற எண்ணை அணுக முடியும். அல்லது https://pmjay.gov.in/ இணையத்திலும் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் 50 கோடி இந்தியா மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் பயனைக் பெற்றுக் கொள்ளலாம்.

என்னவெல்லாம் க்ளைம் செய்யலாம்?

என்னவெல்லாம் க்ளைம் செய்யலாம்?

இந்த திட்டத்தின் மூலம் மருத்து பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சைகள், தீவிர சிகிச்சை சேவைகள் மற்றும் மருத்துவ பொருட்கள், ஆய்வக சேவைகள்ம் தங்குமிடம், மருத்துவ உள்வைப்பு சேவைகள் (Medical implant services) உணவு சேவைகள், மருத்துவ மனைக்கு பிந்தைய 15 நாட்கள் வரையிலான செலவுகள், தற்போது கொரோனா செலவினங்கள் உள்ளிட்ட பலவற்றையும் க்ளைம் செய்து கொள்ள முடியும்.

என்னென்ன தீவிர நோய்கள்

என்னென்ன தீவிர நோய்கள்

  • புரோஸ்டேட் புற்று நோய் (Prostate cancer)
  • இரட்டை வால்வு மாற்று (Double valve replacement)
  • கரோனரி தமனி பைபாஸ் ஒட்டு (Coronary artery bypass graft)
  • கொரோனா வைரஸ் (COVID-19)
    நுரையீரல் வால்வு மாற்று (Pulmonary valve replacement)
  • மண்டை ஓடு அறுவை சிகிச்சை (Skull base surgery)
  • முதுகெலும்பு சரிசெய்தல் (Anterior spine fixation)
  • Carotid angioplasty with stent உள்ளிட்ட இன்னும் பல தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நான் தகுதியானவரா?

நான் தகுதியானவரா?

முதலில் இந்த திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் தகுதியானவர் தானா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக https://pmjay.gov.in/ என்ற அரசின் இணையத்தில் சென்று am i eligible என்பதை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதோடு ஆதார் கார்டு அல்லது பான் கார்டு ஏதேனும் ஒன்று இருந்தாலும் (வயது தெரிந்து கொள்ள சான்று) போதுமானது, உங்களது மொபைல் எண், மற்றும் முகவரி, வருமான சான்றிதல், உங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்தான சான்றிதல் உள்ளிட்டவை தேவை.

 

எப்படி இந்த திட்டத்தில் இணைவது?

எப்படி இந்த திட்டத்தில் இணைவது?

https://pmjay.gov.in/ என்ற இணைய பகுதிக்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள். தேவையான விவரங்களை பதிவு செய்து கொண்டு சப்மிட் செய்யும் போது, உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஆயுஷ்மான் பாரத் கார்டினை பெற 30 ரூபாய் நீங்கள் கட்டமான செலுத்த வேண்டும்.

அப்புறம் சீக்கிரம் சென்று நீங்கள் தகுதியானவர் தானா? என்பதனை பாருங்கள். தகுதியானவர் எனில் இணைந்து கொள்ளுங்கள். நிச்சயம் ஏழை மக்களுக்கு இது நல்ல திட்டம் தான்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ayushman Bharat yojana scheme benefit, how to apply online

Ayushman Bharat Yojana Scheme is essentially a health insurance scheme to cater to the poor. Here we listed full details.
Story first published: Monday, October 12, 2020, 15:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X