உங்க அலும்புக்கு ஒரு அளவு இல்லையா.. ஒரு Garbage Bag விலை 1.4 லட்சமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஷன், பிராண்ட் என்ற பெயரில் பல நிறுவனங்கள், பல பொருட்களை லட்சத்திலும், கோடியிலும் விற்பனை செய்வது வழக்கம் தான்.

இத்தகைய பொருட்களின் தரத்தை தாண்டி இந்தப் பொருட்களை வைத்திருப்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிள் ஆகப் பார்க்கப்படும் காரணத்தாலேயே ஒரு பொருளுக்குச் சற்றும் ஏற்புடைய விலை இல்லாவிட்டாலும் வாங்குவதற்கு வரிசை கட்டி நிற்கின்றனர்.

அந்த வகையில் ஒரு முன்னணி நிறுவனம் வீட்டில் குப்பைகளைப் போடும் கார்பேஜ் பேக் வடிவிலான ஒரு பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டாரில் 'கண்டெஸா’ பிராண்ட் விற்பனை: யாருக்கு தெரியுமா?ஹிந்துஸ்தான் மோட்டாரில் 'கண்டெஸா’ பிராண்ட் விற்பனை: யாருக்கு தெரியுமா?

பிராண்டின் மதிப்பு

பிராண்டின் மதிப்பு

ஒரு பிராண்டின் மதிப்பு என்பது ஒரு பொருளை சக போட்டியாளர்களை விடவும் எப்படி வித்தியாசமாகவும், தரமாகவும் செய்கிறது என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. இதைத் தாண்டி எங்கு, எப்படி விளம்பரம் செய்கிறது என்பதும் ஒரு நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

Balenciaga நிறுவனம்

Balenciaga நிறுவனம்

இப்படிப் பல வருட உழைப்பிற்குப் பின்பு முன்னணி பேஷன் பிராண்ட் ஆகக் கருதப்படும் ஆடம்பர பேஷன் பிராண்டான Balenciaga உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான கார்பேஜ் பேக் வடிவிலான ஒரு பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

 Trash Pouch அறிமுகம்

Trash Pouch அறிமுகம்

Balenciaga நிறுவனம் இந்தப் பேக்-க்கு Trash Pouch எனப் பெயரிட்டு பேஷன் ஷோவில் அறிமுகம் செய்து, தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. Trash Pouch என்பது பெயரில் மட்டும் அல்லாமல் வடிவத்திலும் கார்பேஜ் பேக் போலவே உள்ளது.

பேஷன் உலகம்

பேஷன் உலகம்

Balenciaga நிறுவனத்தின் Trash Pouch-ஐ 2022 Balenciaga's Fall ready-to-wear கலெக்ஷனில் அறிமுகம் செய்து தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வித்தியாசத்தையும் விநோதத்தையும் விரும்பும் பேஷன் உலகம் இந்தப் பேக்-ஐ கொண்டாடினாலும் பலர் வழக்கம் போல் கலாய்த்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

விலை

விலை

தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த Balenciaga பிராண்டின் Trash Pouch விலை 1790 அமெரிக்க டாலர், இது இந்திய ரூபாய் மதிப்பில் 1.4 லட்சம் கோடி ரூபாய். இந்தப் பேக் அச்சுஅசல் கார்பேஜ் பேக் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது Balenciaga நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Balenciaga gets trolled on ₹ 1.4 Lakh Trash Pouch just like garbage bag

Balenciaga gets trolled on ₹ 1.4 Lakh Trash Pouch just like garbage bag உங்க அலும்புக்கு ஒரு அளவு இல்லையா.. ஒரு Garbage Bag விலை 1.4 லட்சமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X