இனி பெங்களூர் மக்கள் டயர் கட்டிக்கிட்டு தான் தூங்கணும் போல.. கல கல மீம்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி நகரமான பெங்களூரில் அக்டோபர் 19ஆம் தேதி இரவு முழுவதும் பெய்த மழையால் மீண்டும் ஒட்டுமொத்த நகரத்தின் முக்கியப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

 

நேற்று பெய்த மழையில் அனேகல், பெங்களூர் கிழக்குப் பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதில் அதிகப்படியாகச் சமன்தூர் பகுதியில் மட்டும் 126மிமி மழை பதிவாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளம் பெங்களூரை தலைகீழாகப் புரட்டிப்போட்ட நிலையில் தற்போது ஒரு நாள் மழை பெங்களூர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

டிவிட்டரில் மக்கள் பல அதிர்ச்சி அளிக்கும் வீடியோக்களைப் பதிவிடும் இதேவேளையில் சிரிக்க வைக்கும் மீம்களும் டிரென்டாகியுள்ளது.

Nandan Nilekani: பெங்களூரில் முக்கிய பகுதியில் புதிய வீடு.. விலை என்ன தெரியுமா..?! Nandan Nilekani: பெங்களூரில் முக்கிய பகுதியில் புதிய வீடு.. விலை என்ன தெரியுமா..?!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா கார்களுக்குச் சாலையில் இருக்கும் குழிகளை ஸ்கேன் செய்ய இதுதான் சரியான நேரம். பெங்களூர் மழை சிறப்பான வாய்ப்பை உருவாக்கியுள்ளது, வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீர்கள்

டைடானிக்

டைடானிக்

டைட்டானிக் ஜாக் மற்றும் ரோஸ் இப்போது பெங்களூர் வந்தால் இது தான் நிலைமை

டிராபிக் அப்டேட்

நேற்று பெய்த கனமழையால் சக்ரா மருத்துவமனை முதல் பெளந்துரு கோடி வரையிலான இணைப்புச் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது, வாகனங்கள் செல்லவில்லை, எனவே பயணிகள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் முடிந்தால் இந்த வழியைத் தவிர்க்கவும்.

வரி
 

வரி

பெங்களூரு வாசிகள் அனைவரும் வரி கட்டுவதை நிறுத்த வேண்டும், பெங்களூர் சாலைகளின் நிலை கேலிக்கூத்தாகியுள்ளது. மோசமான சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள், காங்கிரஸ் ஆட்சி செய்தபோதும் அதே நிலை தான், இப்போது பாஜகவும் அதே சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வீட்டில் தண்ணீர்

வீட்டில் தண்ணீர்


எங்கள் வீட்டுக்குள் இப்படி யொரு காட்சியைக் கண்டது இல்லை, மிக்க நன்றி என ஒரு டிவிட்டர் வாசி புலம்பியுள்ளார்.

டயர்

டயர்

இனி பெங்களூர் மக்கள் டயரை கட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும் என நினைக்கிறேன், இதுதான் பிரச்சனைக்குத் தீர்வு என ஒரு டிவிட்டர் வாசி பதிவிட்டு உள்ளார்

அடித்துச் செல்லும் வண்டி

20-30 நிமிட மழைக்கே பெங்களூரில் இதுதான் நிலைமை எனச் சாலையில் நிற்க வைத்திருந்த மழை வெள்ளம் அடித்துச் செல்லூம் வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.

சுல்தான்பெட்

30 நிமிட மழைக்குப் பின்பு சுல்தான்பெட் பகுதியின் பிரதான சாலையின் நிலைமை இது தான். முதல்வர் கண்டிப்பாக இதை விசாரணை செய்ய வேண்டும்.

யமலூர்

கடந்த முறை பெங்களூர் மழையில் அதிகம் பாதிக்கப்பட்ட யமலூர் பகுதியில் நேற்று இரவு மழையில் மீண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

சிவாஜி நகர்

பெங்களூருவில் கனமழை: மகாதேவபுரா மற்றும் பெங்களூர் கிழக்கு போன்ற பகுதிகளில் 60-80 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவில் சிவாஜி நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் தங்கள் பைக்குகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதைத் தடுக்க முயலும் காட்சி

யமலூர்

யமலூர் பகுதியில் இருக்கும் ஏரி பகுதியின் நிலை.

ஆர்.டி.நகர்

ஆர்.டி.நகர்

பெங்களூரில் முக்கியப் பகுதிகளில் ஒன்றான ஆர்.டி.நகர் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. பல வாகனங்கள் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

பிற வீடியோக்கள்

பெங்களூர் தொடர் மழையால் சிக்கி வரும் நிலையில் மக்களும், நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சமாளிக்கப் பசவராஜ் பொம்மை அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது, ஆனால் ஒரு நாள் மழைக்கே பெங்களூரின் நிலை மோசமாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bangalore Rains memes and videos trending on Twitter; Bengaluru people suffered

Bangalore toppled in one day rain, Shivaji nagar, RT nagr, yamlur, Anekal affected most. Rains memes and videos trending on Twitter; Bengaluru people suffered again on rain flood
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X