வங்கி இயங்கும் நேரத்தில் பெரிய மாற்றம்.. இனி அடிப்படை சேவை மட்டுமே கிடைக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்றில் ஒரு நாளுக்கு 3,00,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகளின் வேலை நேரம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இந்தியன் பேங்க் அசோசியேஷன் முடிவு செய்த நிலையில், இதற்கான அறிவிப்புகள் நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.

 

 வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றம்

வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றம்

கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மட்டுமே இயங்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்தியன் பேங்க் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது. இதேபோல் வங்கிகளில் மக்களுக்குத் தேவையான 4 அடிப்படை சேவைகள் மட்டும் இனி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 முக்கியச் சேவைகள் மட்டும்

முக்கியச் சேவைகள் மட்டும்

இதன் வாயிலாகப் பணம் டெப்பாசிட், வித்டிரா, பணம் அனுப்புதல், அரசு சேவைகளுக்கான பணம் செலுத்துதல் ஆகிய சேவைகள் மட்டுமே இருக்கும். இதனால் மக்கள் முன்கூட்டிய திட்டமிட்டு சேவைகளைப் பெற வேண்டும்.

 வங்கி ஊழியர்கள் அமைப்பு
 

வங்கி ஊழியர்கள் அமைப்பு

வங்கி ஊழியர்கள் அமைப்பு சில நாட்களுக்கு முன்பாக இந்தியன் பேங்க் அசோசியேஷன் அனுப்பிய கடிதத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வங்கி ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

 600 வங்கி ஊழியர்கள் மரணம்

600 வங்கி ஊழியர்கள் மரணம்

இதோடு இந்தக் கடித்ததில் கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாகச் சுமார் 600 வங்கி ஊழியர்களை இழந்துள்ளோம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் நாட்டின் பிற துறைகளைக் காட்டிலும் வங்கி சேவை பிரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் எனவும் IBA அமைப்பின் தரவுகள் கூறுகிறது.

 Work From Home முறை

Work From Home முறை

மேலும் இந்தியன் பேங்க் அசோசியேஷன் தற்போது இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த வங்கி நிர்வாகத்திற்கு, தற்போது நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து பணியற்ற இயலும் ஊழியர்களுக்கு Work From Home அளிக்கவும், வங்கிகள் இயங்கும் நேரத்தைக் குறைக்கவும், ஊழியர்களை ரோடேஷன் முறையில் பணியில் அமர்த்தவும் வலியுறுத்தியுள்ளது.

 கொரோனா தடுப்பு மருத்து

கொரோனா தடுப்பு மருத்து

மேலும் அனைத்து வங்கி ஊழியர்களையும் விரைவில் கொரோனா தடுப்பு மருத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியன் பேங்க் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசு மே 1ஆம் தேதி முதல் 18 முதல் அனைவரும் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ள நிலையில் 100 சதவீத வங்கி ஊழியர்களும் தடுப்பு மருந்தைப் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank branches to reduce business hours and employees to 50% Amid covid cases surge

Bank branches to reduce business hours and employees to 50% Amid covid cases surge
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X