பேங்க் ஆப் பரோடா இன்று அதன் மூன்றாவது காலாண்டு முடிவினைக் வெளியிட்டுள்ளது.
இதன் நிகரலாபம் 107% அதிகரித்து, 2197 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 2088 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த செப்டம்பர் காலாண்டினை கட்டிலும் 5.2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட்டி வருவாய்
இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 14.4% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 13% அதிகரித்தும், 8552 கோடி ரூபாயாக உள்ளது. குளோபல் நிகர வட்டி மார்ஜின் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 3.13% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 2.85% அதிகரித்தும் காணப்படுகின்றது.

உள்நாட்டு டெபாசிட் விகிதம்
அதேபோல உள்நாட்டு டெபாசிட் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 5% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 1.4% அதிகரித்து, 8.76 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல உள் நாட்டு காசா விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும், 12.9% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 3.88% அதிகரித்தும் காணப்படுகின்றது.

மொத்த வாராக்கடன்
இதே மொத்த உள்நாட்டு அட்வான்ஸ் தொகையானது கடந்த ஆண்டினை காட்டிலும், 3.4% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 5% அதிகரித்தும், 6.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தும் காணப்படுகிறது.
எனினும் இதில் நல்ல விஷயம் என்னவெனில் மொத்த வாரக்கடன் விகிதமானது 7.25% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டில் 8.48% ஆக இருந்தது. இதே செப்டம்பர் காலாண்டில் 8.11% ஆகவும் இருந்தது.

நிகர வாரக்கடன்
நிகர வாரக்கடன் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 2.25% ஆகவும், இது கடந்த ஆண்டில் 2.39% ஆகவும் இருந்தது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் 2.83% ஆகவும் இருந்தது.
ஒருங்கிணைந்த அடிப்படையில் இவவங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 106% அதிகரித்தும், இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 13.7% அதிகரித்து, 2464 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பங்கு விலை நிலவரம்
பேங்க் ஆப் பரோடாவின் பங்கு விலையானது கடந்த அமர்வில், என்.எஸ்.இ-யில் 2.74% அதிகரித்து, 106.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 111.90 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 61.75 ரூபாயாகும்.
பிஎஸ்இ-யில் 2.74% அதிகரித்து, 106.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 111.90 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 61.80 ரூபாயாகும்.