9 மடங்கு லாபம் கொடுத்த பாங்க் ஆப் பரோடா.. முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுத் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கியான பாங்க் ஆஃப் பரோடா அதன் மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இதே மார்ச் காலாண்டில் இதன் நிகர லாபம் 1,779 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2022ம் நிதியாண்டில் இதன் வரிக்கு பிந்தைய லாபம் 9 மடங்கு அதிகரித்து, 7272 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 829 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 6 மாதத்தில் 1700% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு.. நீங்க வாங்கி வைத்திருக்கீங்களா? 6 மாதத்தில் 1700% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு.. நீங்க வாங்கி வைத்திருக்கீங்களா?

இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது கடந்த நிதியாண்டில் 13 சதவீதம் அதிகரித்து, 32,621 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2021 ஆம் நிதியாண்டில் 28,809 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் காலாண்டு நிலவரம்

மார்ச் காலாண்டு நிலவரம்

இது கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் 1,779 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது லாபம் விகிதமானது 19 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த டிசம்பர் காலாண்டில் 2197 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் காலாண்டில் இதன் வட்டி வருவாய் 21% சதவீதம் அதிகரித்து, 8,612 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 7,107 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது

அட்வான்ஸ் விகிதம்

அட்வான்ஸ் விகிதம்

குளோபல் அட்வான்ஸ் விகிதமானது கடந்த நிதியாண்டில் 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டில் காட்டிலும் 6 சதவீதம் அதிகரித்து, 8, 18,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே இதன் உள்நாட்டு அட்வான்ஸ் வளர்ச்சி விகிதமானது கடந்த நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியும், கடந்த காலாண்டினை காட்டிலும் 4.6 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

கடன் வளர்ச்சி

கடன் வளர்ச்சி

இதன் டெபாசிட் மற்றும் சேமிப்பு விகிதம் நில அளவு கடந்த ஆண்டை காட்டிலும் இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளது.

இதன் மூலம் ஹோம் லோன் வளர்ச்சி விகிதமானது 11.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தனிநபர் பிரிவில் 108 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே வாகன கடன் பிரிவில் 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கல்விக்கடன் வளர்ச்சியானது 16.7 சதவிகிதமும், விவசாய கடன் விகிதமானது 10.3 சதவீதம் அதிகரித்து, 1,09,796 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இதே எம் எஸ் எம் இ போர்ட்போலியோ விகிதமானது 5.4 சதவீதம் அதிகரித்து, 96,863 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

செயல்பாட்டு வருவாய்

செயல்பாட்டு வருவாய்

இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும், 2022ம் நிதியாண்டில் 5.7% அதிகரித்து, 44,106 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த செயல்பாட்டு லாபம் 5.6 சதவீதம் அதிகரித்து, 22,389 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 டிவிடெண்ட்

டிவிடெண்ட்

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் விகிதமானது ஒரு பங்குக்கு 1.20 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலையானது இன்று முடிவில் என் எஸ் இ-யில் 1.09% குறைந்து, 95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது பி எஸ் இ-யில் 1.15% அதிகரித்து, 94.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank of baroda reported net profit jumps 9 fold to Rs.7272 crore in q4

Bank of Baroda's after-tax profit increased nine-fold to Rs 7,272 crore in FY2022. It had a net profit of Rs 829 crore last year.
Story first published: Friday, May 13, 2022, 23:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X