டெபாசிட், வித்டிரா கட்டணத்தைத் திரும்பப் பெற்றது பாங்க் ஆப் பரோடா.. மக்கள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கித் துறையில் முக்கியமான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாங்க் ஆப் பரோடா, வாடிக்கையாளர் செய்யும் டெபாசிட் மற்றும் வித்டிராவல்களுக்கு நவம்பர் மாதம் முதல் புதிய கட்டணத்தை அறிவித்தது.

இப்புதிய கட்டணத்திற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு புதுப்பிக்கக் கட்டணம் அனைத்தையும் திரும்பப்பெற்று பழைய கட்டணத்தையே தொடருவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா தனது டிவிட்டரில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு 1.11.2020 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட சேவை கட்டணங்கள் அனைத்தும் திரும்பப் பெற்றப்பச்சுள்ளது. இதன் மூலம் பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் பழைய கட்டணத்திலேயே சேவைகளைப் பெறலாம் என அறிவித்துள்ளது.

வாயை குடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா.. 35 பில்லியன் டாலர் ஐபிஓ-வுக்கு செக்..! வாயை குடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா.. 35 பில்லியன் டாலர் ஐபிஓ-வுக்கு செக்..!

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

மத்திய நிதியமைச்சக, தற்போது வங்கிகள் அறிவித்துள்ள கட்டணங்கள் எதுவும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்குகளுக்கு (Basic Savings Bank Deposit) பொருந்தாது, இதில் ஏழை எளிய மக்களுக்கு வங்கி சேவை கிடைப்பதற்காகத் திறக்கப்பட்ட ஜன் தன் வங்க கணக்குகளும் பொருந்தும் என அறிவித்தது.

இதன் பின்பே பாங்க் ஆப் பரோடா புதிய 1.11.2020 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட சேவை கட்டணங்கள் அனைத்தும் திரும்பப் பெற்றப்பட்டுள்ளது.

 

புதிய கட்டணம்

புதிய கட்டணம்

பாங்க் ஆப் பரோடா cash handling கட்டணமாக முன்பு 10 முதல் 10,000 ரூபாய் வரையில் பெற்றுவந்த நிலையில் புதிய கட்டண அறிவிப்பில் இதை 50 முதல் 20,000 ரூபாய் வரையில் உயர்த்தி, இப்புதிய கட்டணம் நவம்பர் 1ஆம் முதல் அமலாக்கம் செய்தது.

டெபாசிட், வித்டிரா கட்டணம்

டெபாசிட், வித்டிரா கட்டணம்

மேலும் பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதம் 5 முறை இலவச கேஷ் டெபாசிட்கள் இருந்த நிலையில், 3 முறையாகக் குறைத்து அறிவித்தது. 3 முறைக்கு அதிகமாகச் செய்யப்படும் ஒவ்வொரு கேஷ் டெபாசிட்களுக்கும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவித்தது.

இதேபோல் மாதம் 3 பிரிமாற்றங்களுக்கு மட்டுமே இலவசம் என்றும், 3 முறைக்குப் பின் செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 150 ரூபாய் கட்டணம் என அறிவித்தது. செவ்வாய்க்கிழமை மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பாலும், நிதி அமைச்சகத்தில் உத்தரவாலும் புதிய கட்டணங்கள், பரிமாற்ற எண்ணிக்கை அனைத்தும் திரும்பப் பெற்றுள்ளது.

 

அனைத்து வங்கி கணக்குகள்

அனைத்து வங்கி கணக்குகள்

இதன் மூலம் சேமிப்புக் கணக்குகள், கரன்ட் அக்கவுன்ட், கேஷ் கிரெடிட் அக்கவுன்ட் மற்றும் ஓவர்டிராப் அக்கவுன்ட் ஆகியவற்றுக்குப் பாங்க் ஆப் பரோடா விதித்த கட்டணங்கள் பொருந்தாது. மேலும் அனைத்து கணக்குக்களுக்கும் பழைய மாதாந்திர டெப்பாசிட் மற்றும் வித்டிராவல் எண்ணிக்கையே தொடரும் என விளக்கம் அளித்துள்ளது பாங்க் ஆப் பரோடா.

பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள்

மேலும் நிதியமைச்சகம் தனியார் துறை வங்கிகளைப் போலவே பொதுத்துறை வங்கிகளும் சேவை கட்டணங்களை அறிவிக்க உரிமை உண்டு, ஆனால் அறிவிக்கப்படும் கட்டணம் நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இதோடு, அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கொரோனா பாதிப்புகள் குறையும் வரையில் வங்கி சேவை கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank of Baroda rolls back New charges on cash deposits, withdrawals

Bank of Baroda rolls back New charges on cash deposits, withdrawals
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X