அரசு நடத்தும் வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா கடந்த திங்கட்கிழமையன்று தனது கடன்களுக்கான அடிப்படை விகிதத்தினை (MCLR) 20 வரை அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
இதே நாட்டின் முதன்மை வங்கியும், முதல் கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூட தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைத்தது. இந்த நிலையில் பேங்க் ஆப் இந்தியா 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இது இனி 7.75 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.30 சதவிகிதத்திலிருந்து 8.20 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் செலுத்தும் இ.எம்.ஐ தொகை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது ஒரு வருட கடன் எம்.சி.எல்.ஆர் விளிம்பை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து 9.90 சதவிகிதமாக அறிவித்துள்ள, சில நாட்களுக்கு பிறகு பேங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
அதிலும் எஸ்பிஐ தற்போது எட்டாவது முறையாக வட்டிக் குறைப்பினை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நாட்டின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குனரான ஹெச்.டி.எஃப்.சி வங்கி அனைத்து கடன்தாரர்களுக்கும் 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஒரு வருட எம்.சி.எல்.ஆர் விகிதத்தினை ஆண்டுக்கு 8.30 சதவிகிதத்திலிருந்து 8.15 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதே 2 வருட மற்றும் 3 வருட குத்தகைதாரர்களுக்கு அடிப்படை வட்டி விகிதம் 15 அடிப்படை விகிதத்தினை குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 5 முறை வட்டி குறைப்பு செய்துள்ள நிலையில், இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த வாரம் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி குறைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் இந்த முறை வட்டி குறைப்பு இல்லை என்று தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பு செலுத்த வேண்டிய குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சில வங்கிகளில் ரிசர்வ் வங்கி குறைப்பு செய்யாத போதும் கூட, சில வங்கிகள் வட்டி குறைப்பு செய்துள்ளது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.