பேங்க் ஆப் இந்தியாவின் செம திட்டம்.. பட்டையை கிளப்பிய பங்கு விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு துறைய வங்கியான பேங்க் ஆப் இந்தியா, அதன் துணை நிதி நிறுவனங்களின் 49% பங்குகளை வாங்கவுள்ளதாக கூறியுள்ளது.

இவ்வங்கியின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இவ்வங்கி பங்கின் விலையானது 4% வரை ஏற்றம் கண்டு திரும்பியுள்ளது.

அதெல்லாம் சரி இவ்வங்கி என்னென்ன நிறுவனங்களின் பங்குகளை வாங்க போகிறது? எவ்வளவு பங்குகளை வாங்க போகிறது. வாருங்கள் பார்க்கலாம்.

பிஓஐ-யின் துணை நிறுவனங்கள்
 

பிஓஐ-யின் துணை நிறுவனங்கள்

பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிதி நிறுவனங்களான பிஓஐ ஏஎக்ஏ இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் (BOI AXA Investment Managers Pvt Ltd), பிஓஐ ஏஎக்ஏ டிரஸ்டீ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (BOI AXA Trustee Services Pvt Ltd) நிறுவனங்களில், ஒவ்வொன்றிலும் 49% பங்குகளை வாங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்திலும் இவ்வங்கி கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த இரு நிறுவனங்களின் பங்குகளும் முறையே 51% உள்ளது குறிப்பிடத்தக்கது.

கையகப்படுத்தலுக்கு பிறகு முழு துணை நிறுவனங்கள்

கையகப்படுத்தலுக்கு பிறகு முழு துணை நிறுவனங்கள்

இந்த நிலையில் இந்த பங்குகளை வாங்கிய பிறகு, பிஓஐ ஏஎக்ஏ இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட், பிஓஐ ஏஎக்ஏ டிரஸ்டீ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே பேங்க் ஆப் இந்தியாவின் முழு துணை நிறுவனங்களாக மாறும். இதற்கிடையில் தான் இந்த வங்கியின் பங்கு விலையானது 4% அதிகரித்துள்ளது.

பிஐஓ-வின் பங்கு விலை

பிஐஓ-வின் பங்கு விலை

மதியம் 2.31 மணியளவில் இந்த பங்கின் விலையானது 3.16% ஏற்றம் கண்டு, 48.95 ரூபாயாக காணப்பட்டது. எனினும் அதன்பிறகு 4% ஏற்றத்தினைக் கண்டது. பிறகு முடிவில் 2.85% ஏற்றத்தில் 48.75 ரூபாயாகவும் காணப்பட்டது.

இந்த வங்கி பங்கின் விலையானது அதன் 52 வார உச்சமாக 79.80 ரூபாயினை கடந்த நவம்பர் 2019லும், இதுவே இதன் 52 வார குறைந்தபட்ச விலையான 30.45 ரூபாயினை தொட்டது. இந்த நிலையில் அதன் 52 வார உச்சத்தில் இருந்து 38.66% சரிவில் இந்த வங்கி பங்கின் விலையானது காணப்படுகிறது.

டர்ன் ஓவர் என்ன?
 

டர்ன் ஓவர் என்ன?

பிஓஐ ஏஎக்ஏ இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டர்ன் ஓவர் கடந்த நிதியாண்டில் 25.45 கோடி ரூபாயாக இருந்தது. இதே பிஓஐ ஏஎக்ஏ டிரஸ்டீ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டர்ன் ஓவர் கடந்த நிதியாண்டில் 0.12 கோடி ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank of India shares rise 4% after bank said will acquire 49% stake in subsidiaries

Bank of India updates.. Bank of India shares rise 4% after bank said will acquire 49% stake in subsidiaries
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X