நாடு முழுவதும் 300 புதிய கிளைகளை இன்னும் 2 ஆண்டுகளில் துவங்க இருப்பதாக இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகளின் போட்டிகளை சமாளிப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்துள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தற்போது அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 300 புதிய கிளைகளை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீராம் குழுமத்தின் 3 நிறுவனங்கள் இணைய ரிசர்வ் வங்கி ஒப்புதல்!

பேங்க் ஆப் மகாராஷ்டிரா
பேங்க் ஆப் மகாராஷ்டிரா தனது தொழிலை விரிவு படுத்துவதற்காகவும் வாடிக்கையாளர்களை அதிகமாக கவரவும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக எடுத்து வருகிறது.

300 கிளைகள்
அதன் ஒரு பகுதியாகத்தான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 300 புதிய கிளைகள் தொடங்க உள்ளதாகவும் இந்த கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் சேவை செய்ய உதவும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.+

வாடிக்கையாளர்கள்
அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 300 புதிய கிளைகள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முதல்கட்டமாக வங்கி கிளைகள் அமைப்பதற்கான இடம் பார்க்கும் பணி தொடங்கி விட்டதாகவும் இவ்வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏடிஎம் மையங்கள்
மேலும் பெரும்பாலான வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான ஏடிஎம் மையங்கள் இருந்தாலும் பணத்தை டெபாசிட் செய்வதற்கான எந்திரங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ரீசைக்கிளர்
இந்த நிலையில் ரீசைக்கிளர் என்று கூறப்படும் பணத்தை டெபாசிட் செய்யும் எந்திரங்களையும் அதிகம் நிறுவ பேங்க ஆப் மகாராஷ்டிரா வங்கி முடிவு செய்துள்ளது எனவே இந்த இயந்திரத்தின் மூலம் பணத்தை எடுக்கவும் முடியும், டெபாசிட் செய்யவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

கடன்
மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சில்லரை வணிக துறைகளைச் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான திட்டத்தையும் எளிமைப்படுத்தி உள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.