நவம்பர் 19ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. என்ன காரணம் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று வங்கி அதிகாரி தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகள் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தால் வங்கி சேவை மட்டும் அல்லாமல் நாட்டின் நிதி பரிமாற்றங்களும் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி சில முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

தீபாவளி மெசேஜ் அனுப்பும் மோசடி கும்பல்.. க்ளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!தீபாவளி மெசேஜ் அனுப்பும் மோசடி கும்பல்.. க்ளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!

 வங்கி ஊழியர்கள்

வங்கி ஊழியர்கள்

வங்கி நிர்வாகத்திற்கு எதிராகவும், வங்கி ஊழியர்களுக்குச் சாதகமாகவும் வங்கி ஊழியர்கள் சங்கத்தில் செயலாற்றியதற்காக வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நவம்பர் 19 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

AIBEA அமைப்பு

AIBEA அமைப்பு


அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் இதுகுறித்து பேசுகையில் சமீபகாலமாகச் சங்கத்தில் இணைந்து பணியாற்றியதற்காக வங்கி ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி இந்தத் தாக்குதல்கள் அனைத்திலும் ஒரு பொதுவான கருத்தும் உள்ளது தெரிய வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 வெங்கடாசலம்
 

வெங்கடாசலம்

வங்கி ஊழியர்கள் மீதான தாக்குதல்களில் ஒரு வடிவமைப்பு இருப்பதை நாங்க பார்க்கிறோம். எனவே ஒட்டுமொத்தமாக AIBEA அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வங்கி ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல்களை நாம் எதிர்க்க வேண்டும், பதிலடி கொடுக்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்று வெங்கடாசலம் AIBEA அமைப்பின் உறுப்பினர்களிடம் கூறினார்.

பணிநீக்கம்

பணிநீக்கம்

AIBEA தொழிற்சங்கத் தலைவர்கள் சோனாலி வங்கி, MUFG வங்கி, பெடரல் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக AIBEA) பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியுள்ளார்.

அவுட்சோர்சிங்

அவுட்சோர்சிங்

மேலும் இந்தியாவில் இயங்கி வகும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி பணிகளை அவுட்சோர்சிங் செய்வதாகவும் வெங்கடாசலம் வங்கிகள் மீது குற்றம் சாட்டினார்.

பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிர்வாகம் கண்மூடித்தனமாக ஊழியர்களைப் பணியிட மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இருதரப்புத் தீர்வு மற்றும் வங்கி அளவிலான தீர்வை மீறி 3300-க்கும் மேற்பட்ட கிளார்க் ஊழியர்கள் ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்த போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம்

வங்கி ஊழியர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து AIBEA அமைப்பின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வங்கி ஊழியர்கள்

வங்கி ஊழியர்கள்

வங்கி ஊழியர்கள் இதற்கு முன்பு விடுமுறை, வேலை நேரம், சம்பள உயர்வு, தனியார்மயமாக்கல் போன்றவற்றுக்கு தான் போராட்டம் நடத்தினர், ஆனால் இந்த முறை வங்க ஊழியர்களுகாக போராட்டம் நடத்திய சக வங்கி ஊழியர்ககள் பாதிப்பு அடைந்த காரணத்திற்காக போராடுகின்றனர்.

இந்த போராட்டம் நியாயமானதா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank Strike: AIBEA nationwide protests amid targeted victimisation of bankers for being active in union

Bank Strike: AIBEA nationwide protests amid targeted victimisation of bankers for being active in union
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X