நவம்பர் 19ஆம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்.. ஏடிஎம் சேவை பாதிக்கப்படுமா?

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் இதனால் வங்கி விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலைநிறுத்த நாட்களில் பொதுமக்கள் சிரமப்படுவார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் ஸ்டிரைக்

வங்கிகள் ஸ்டிரைக்

பேங்க் ஆப் பரோடா நேற்று ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய வங்கி சங்கத்திற்கு வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கியின் கிளைகள் அலுவலகங்கள் சுமூகமாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் வங்கி நிர்வாகங்கள் எடுத்து வருகிறது.

நவம்பர் 19

நவம்பர் 19

நவம்பர் 19ஆம் தேதி வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஏடிஎம் பயன்பாடுகளும் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மூன்றாவது சனி

மூன்றாவது சனி

இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிகளின் பல்வேறு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டிரைக் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நவம்பர் 19 அன்று மூன்றாவது சனி என்றாலும் அன்றைய தினம் வங்கி வேலை நாள் என்பதும், வேலைநாளில் வங்கி வேலை நிறுத்தம் செய்யப்படுவது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டம்

போராட்டம்

கடந்த மாதம் AIBEA பொதுச் செயலாளர் CH வெங்கடாசலம் IANS இடம், வங்கியாளர்களை இலக்கு வைத்து பலிகடா ஆக்குவதற்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று தெரிவித்திருந்தார். சமீபகாலமாக வங்கி ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+